Advertisment

தினசரி ராசிபலன் - 26.03.2020

கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091 7200163001. 9383763001,

இன்றைய பஞ்சாங்கம்

26-03-2020, பங்குனி 13, வியாழக்கிழமை, துதியை திதி இரவு 07.54 வரை பின்பு வளர்பிறை திரிதியை. ரேவதி நட்சத்திரம் காலை 07.16 வரை பின்பு அஸ்வினி. சித்தயோகம் காலை 07.16 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. சந்திர தரிசனம். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

Advertisment

தினசரிராசிபலன் - 26.03.2020

mesham

மேஷம்

இன்று பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும். நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும்.

Advertisment

reshabam

ரிஷபம்

இன்று உத்தியோகத்தில் பணிசுமை அதிகரிக்கும். குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் தக்க நேரத்தில் கிடைக்கும். தொழில் ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களால் அனுகூலங்கள் உண்டாகும். எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது.

3

மிதுனம்

இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். திடீர் என்று நல்ல செய்தி வரும். சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் வெளியூர் நபர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். வருமானம் பெருகும்.

kadagam

கடகம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் புதிய கூட்டாளியின் சேர்க்கையால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

5

சிம்மம்

இன்று உங்களுக்கு மனதில் குழப்பமும் கவலையும் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். சிலருக்கு வேலையில் எதிர்பாராத இடமாற்றம் கிடைக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வ வழிபாடு நல்ல முன்னேற்றத்தை தரும்.

kannirasi

கன்னி

இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. மற்றவர்களிடம் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்ப்பது உத்தமம்.

thulam

துலாம்

இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். உறவினர்கள் மூலம் உதவிகள் கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பழைய கடன்கள் வசூலாகும்.

viruchagam

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் படிப்பு சிறப்பாக இருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். தொழில் ரீதியான பயணங்களால் நற்பலன்கள் உண்டாகும்.

danush

தனுசு

இன்று உங்களுக்கு வியாபார ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் உண்டாகலாம். வீட்டு தேவைகளை சமாளிக்க கடன் வாங்க நேரிடும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. உறவினர்களின் உதவியால் பணப்பற்றாக்குறை ஓரளவு நீங்கும். வேலையில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும்.

magaram

மகரம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும். பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் அமைதி குறையலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சலுக்கேற்ப லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று குறையும்.

kumbam

கும்பம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத தன வரவுகள் உண்டாகும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக உள்ள நெருக்கடிகள் சற்று குறையும். எடுக்கும் முயற்சியில் உற்றார் உறவினர்களால் நற்பலன்கள் கிட்டும்.

meenam

மீனம்

இன்று குடும்பத்தில் உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும். கூட்டாளிகள் வழியில் உதவிகள் கிட்டும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

daily rasipalan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe