Skip to main content

இன்றைய ராசிபலன் -25.12.2023

Published on 25/12/2023 | Edited on 25/12/2023

 

nn

 

இன்றைய  பஞ்சாங்கம்

25-12-2023, மார்கழி 09, திங்கட்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 05.47 வரை பின்பு பௌர்ணமி. ரோகிணி நட்சத்திரம் இரவு 09.39 வரை பின்பு மிருகசீரிஷம். அமிர்தயோகம் இரவு 09.39 வரை பின்பு சித்தயோகம். லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 

இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

இன்றைய ராசிபலன் -  25-12-2023

mesham

மேஷம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும்.

reshabam

ரிஷபம்

இன்று வியாபாரம் சிறப்பாக நடைபெறும். தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோக முன்னேற்றத்திற்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வெளி வட்டார நட்பு ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும்.


3

மிதுனம் 

.இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கலாம். மதிநுட்பத்துடன் செயல்பட்டால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

kadagam

கடகம்

இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் பெறுவீர்கள். உடல் நலம் சிறப்பாக இருக்கும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். சேமிப்பு உயரும்.

5

சிம்மம்

இன்று வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அமோகமாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். குடும்பத்தில் புத்திர வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

kannirasi

கன்னி

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பிள்ளைகள் வழியில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றி அடைய உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.

thulam

துலாம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். எதிலும் கவனம் தேவை.

viruchagam

விருச்சிகம்

இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிடைக்கும். பொன் பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் வரும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். இதுவரை வராத கடன்கள் இன்று வசூலாகும்.

danush

தனுசு

இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் இருப்பார்கள். திடீர் பணவரவு உண்டாகும். கடன் பிரச்சினைகள் குறையும். வெளியூர் பயணங்களால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.


magaram

மகரம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வமின்றி இருப்பார்கள். உறவினர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். நண்பர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

kumbam

கும்பம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் ஆர்வம் குறையும். பிள்ளைகள் வழியில் சிறு சிறு மனகவலைகள் தோன்றும். வியாபாரத்திற்கான வங்கி கடன் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

meenam

மீனம்

இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். வீட்டில் பெண்கள் வகையில் அனுகூலங்கள் உண்டாகும். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

இன்றைய ராசி பலன்-22.06.2024

Published on 21/06/2024 | Edited on 22/06/2024

 

Today rasi palan - 26.04.2024

இன்றைய  பஞ்சாங்கம்
22-06-2024, ஆனி 08, சனிக்கிழமை, பௌர்ணமி திதி காலை 06.38 வரை பின்பு பிரதமை திதி பின்இரவு 05.13 வரை பின்பு தேய்பிறை துதியை. மூலம் நட்சத்திரம் மாலை 05.54 வரை பின்பு பூராடம். நாள் முழுவதும் சித்தயோகம். தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 

இராகு காலம் - காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

இன்றைய ராசி பலன் - 22.06.2024

mesham

மேஷம்

இன்று உங்களுக்கு உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். மற்றவர்களுடன் ஏற்பட்ட  மனஸ்தாபங்கள் படிப்படியாக குறையும். எந்த விஷயத்திலும் பொறுமையுடனும், கவனமுடனும் இருப்பது நல்லது. வியாபார சம்பந்தமான புதிய முயற்சிகளில் கூட்டாளிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.
 

reshabam

ரிஷபம்

இன்று உங்களுக்கு மனக்குழப்பமும், கவலையும் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படும். வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வது உத்தமம்.

3

மிதுனம் 

இன்று தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் உதவியால் உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சீராகும்.


kadagam

கடகம்

இன்று தொழில் ரீதியாக பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு பொன்பொருள் வாங்கும் யோகம் உண்டு. பழைய பாக்கிகள் வசூலாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

5

சிம்மம்

இன்று வியாபார ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் செயல்களால் நிம்மதி குறைவு உண்டாகும். உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலன் கிட்டும். தெய்வ வழிபாடு நல்லது.

kannirasi

கன்னி

இன்று குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்படலாம். வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும்.  அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் உதவியால் தொழில் வளர்ச்சிக்கான பொருளாதார தேவைகள் பூர்த்தியாகும். பெண்களுக்கு வீட்டில் பணிச்சுமை குறையும்.
 

thulam

துலாம்

இன்று உற்றார் உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை ஏற்படுத்தும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். வராத பழைய கடன்கள் வசூலாகும்.

 

viruchagam

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் எதிர்பாராத திடீர் விரயங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும்.
 

danush

தனுசு

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். உறவினர்கள் உதவியால் கடன் பிரச்சினைகள் தீரும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.


magaram

மகரம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் தடைப்படும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உடன்பிறந்தவர்கள் வாயிலாக உதவிகள் கிடைக்கும்.

kumbam

கும்பம்

இன்று உங்களுக்கு உறவினர்களின் திடீர் வருகை மகிழ்ச்சியை அளிக்கும். சுப காரிய முயற்சிகளில் சாதகமான நிலை உண்டாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் கிட்டும். நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும்.
 

meenam

மீனம்

இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. உத்தியோகஸ்தர்கள் வேலையில் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

 

Next Story

இன்றைய ராசி பலன்-21.06.2024

Published on 20/06/2024 | Edited on 21/06/2024
Today rasi palan - 26.04.2024

இன்றைய  பஞ்சாங்கம்

21-06-2024, ஆனி 07, வெள்ளிக்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி காலை 07.32 வரை பின்பு பௌர்ணமி. கேட்டை நட்சத்திரம் மாலை 06.18 வரை பின்பு மூலம். மரணயோகம் மாலை 06.18 வரை பின்பு அமிர்தயோகம். பௌர்ணமி விரதம். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 

இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00
 

இன்றைய ராசி பலன் - 21.06.2024

mesham

மேஷம்

இன்று நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதற்கு தடங்கல்கள் ஏற்படலாம். குடும்பத்தினருடன் தேவையற்ற மனஸ்தாபம் தோன்றும். உங்கள் ராசிக்கு மாலை 6.18 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது நல்லது. வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும்.

reshabam

ரிஷபம்

இன்று உங்கள் ராசிக்கு மாலை 6.18 மணி முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். பிறரை நம்பி எந்த காரியத்திலும் ஈடுபடாமல் இருப்பது உத்தமம். வேலையில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது.

3

மிதுனம் 

இன்று தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிடைக்கும். சுப முயற்சிகளில் முன்னேற்றங்கள் உண்டாகும். ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை குறையும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு அமையும்.

kadagam

கடகம்

இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அடைவதில் சிக்கல்கள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் ஆர்வம் குறையும். உத்தியோகஸ்தர்கள் செய்யும் வேலைகளில் கவனமுடன் செயல்பட்டால் வெற்றி அடைய முடியும். தெய்வ வழிபாடு நல்லது.
 

5

சிம்மம்

இன்று எடுத்த காரியத்தை முடிப்பதற்கு சற்று கால தாமதமாகும். குடும்பத்தினரை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
 

kannirasi

கன்னி

இன்று குடும்பத்தில் பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். மற்றவர்களுக்கு உதவும் வகையில் பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகளில் சாதகமான பலன்கள் உண்டாகும்.
 

thulam

துலாம்

இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாக இருக்கும். உத்தியோகத்தில் சிறு வேலையை செய்வதற்கு கூட அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களால் அனுகூலங்கள் உண்டாகும்.

viruchagam

விருச்சிகம்

இன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு ஆனந்தத்தை தரும். தொழில் வியாபாரத்தில் பணியாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு உத்தியோக உயர்வு உண்டாகும்.
 

danush

தனுசு

இன்று எதிர்பாராத வகையில் திடீர் செலவுகள் உண்டாகும். வியாபார ரீதியான நெருக்கடிகளால் மனநிம்மதி குறையும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் சற்று நிதானத்துடன் இருப்பது நல்லது. உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலம் கிட்டும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகமாகும்.


magaram

மகரம்

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வீட்டில் பிள்ளைகளால் இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.
 

kumbam

கும்பம்

இன்று குடும்பத்தில் உறவினர்களால் சுபசெலவுகள் ஏற்படும். வேலையில் உயர் அதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

meenam

மீனம்

இன்று உடல் ஆரோக்கிய ரீதியாக செலவுகள் ஏற்படும். சுப முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. குடும்பத்தினரை அனுசரித்து செல்வதன் மூலம் ஒரு சில அனுகூலங்கள் உண்டாகும்.