தினசரி ராசிபலன்- 24.04.2021

மிதுனம்

இன்று உங்களுக்கு பணபுழக்கம் சற்று குறைந்து காணப்படும்-. தேவைகள் நிறைவேற மற்றவர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் பிற மொழி நபர்களால் புதிய வாய்ப்பு கிடைக்கும். வேலையில் பணிச்சுமை குறையும்.

kadagam

கடகம்

இன்று வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். ஆடம்பர பொருள் வாங்குவதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உடன் பணிபுரிவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

5

சிம்மம்

இன்று குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். வருமானம் இரட்டிப்பாகும்.வெளிவட்டார நட்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் குறையும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நற்பலனை தரும்.

kannirasi

கன்னி

இன்று குடும்பத்தினருடன் சிறு சிறு மனசங்கடங்கள் ஏற்படும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. அலுவலகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.

thulam

துலாம்

இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் நல்ல லாபம் உண்டாகும். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எந்த வேலையிலும் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.

viruchagam

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். வியாபார முன்னேற்றத்திற்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். இது வரை வராத கடன்கள் வசூலாகும். பொன்பொருள் சேரும்.

danush

தனுசு

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டில் பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். பூர்வீக சொத்துகள் வழியில் எதிர்பார்த்த லாபம் அடைவீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான திட்டங்கள் நிறைவேறும். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும்.

magaram

மகரம்

இன்று உங்கள் ராசிக்கு பகல் 11.56 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலிலும் பிடிப்பு இல்லாமல் செயல்படுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. மதியத்திற்கு பின் மன அமைதி உண்டாகும்.

kumbam

கும்பம்

இன்று உங்கள் ராசிக்கு பகல் 11.56 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. வியாபார ரீதியான பிரச்சினைகளில் சற்று அமைதி காப்பது நல்லது. வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கை வேண்டும்.

meenam

மீனம்

இன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

daily rasipalan
இதையும் படியுங்கள்
Subscribe