இன்றைய பஞ்சாங்கம்

23-12-2020, மார்கழி 08, புதன்கிழமை, நவமி திதி இரவு 08.40 வரை பின்பு வளர்பிறை தசமி. ரேவதி நட்சத்திரம் பின்இரவு 04.32 வரை பின்பு அஸ்வினி. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1/2. தனிய நாள். புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00.

தினசரிராசிபலன்- 23.12.2020

mesham

Advertisment

மேஷம்

இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடு தோன்றலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப்பலன் உண்டாகும். தொழிலில் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் லாபம் கிட்டும்.

reshabam

Advertisment

ரிஷபம்

இன்று குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். வருமானம் இரட்டிப்பாகும். வெளிவட்டார நட்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் குறையும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நற்பலனை தரும்.

3

மிதுனம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். வியாபாரத்தின் முன்னேற்றத்திற்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். இதுவரை வராத கடன்கள் வசூலாகும். பொன்பொருள் சேரும்.

kadagam

கடகம்

இன்று உங்களுக்கு குடும்பத்தினரின் மாற்று கருத்தால் மனநிம்மதி குறையும். நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள். தெய்வ வழிபாடு நல்லது.

5

சிம்மம்

இன்று உங்களுக்கு மனதில் குழப்பம், கவலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சுப காரியங்களை தவிர்ப்பது நல்லது. பயணங்களில் கவனம் வேண்டும். வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

kannirasi

கன்னி

இன்று உங்களுக்கு பணபுழக்கம் அதிகமாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். கூட்டாளிகளின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புக்கள் வந்து சேரும்.

thulam

துலாம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டில் பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள். பூர்வீக சொத்துகளை வழியில் எதிர்பார்த்த லாபம் அடைவீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான திட்டங்கள் நிறைவேறும். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும்.

viruchagam

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும். வேலையில் பணிச்சுமை அதிகமாகும். குடும்பத்தில் பெண்கள் சிக்கனமாக செயல்படுவார்கள். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் கிடைக்கும்.

danush

தனுசு

இன்று குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படும். உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கலாம். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.

magaram

மகரம்

இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் நல்ல லாபம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எந்த வேலையிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

kumbam

கும்பம்

இன்று உங்களுக்கு குடும்பத்தினருடன் சிறுசிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். எடுக்கும் காரியங்களில் சற்று நிதானத்துடன் செயல்பட்டால் அனுகூலப் பலனை அடையலாம். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கி சற்று முன்னேற்றம் ஏற்படும்.

meenam

மீனம்

இன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.