Advertisment

தினசரி ராசிபலன்- 23.05.2022

Advertisment

மிதுனம்

இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். சிக்கனமாக நடந்து கொள்வதன் மூலம் பணப்பிரச்சினை விலகும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

kadagam

கடகம்

இன்று எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். எடுத்த காரியம் பாதியில் தடைபட்டு மன அமைதி குறையும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம்.

5

சிம்மம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும். வியாபார ரீதியான புதிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். பொருளாதார பிரச்சினைகள் விலகும்.

kannirasi

கன்னி

இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்திலும் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை கூடும். பணம் கொடுக்கல் வாங்கல் ஓரளவு சிறப்பாக இருக்கும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நற்பலனை தரும்.

thulam

துலாம்

இன்று பணவரவு சுமாராக இருக்கும். உறவினர்களுடன் வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். அலுவலகத்தில் தேவையற்ற பிரச்சினையால் மன உளைச்சல் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை இருந்தாலும் பெரிய கெடுதி இருக்காது. நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.

viruchagam

விருச்சிகம்

இன்று தொழில் வியாபாரம் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் நெருக்கடிகளால் வேலைபளு சற்று அதிகரிக்கும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் கிட்டும். எதிர்பார்த்த உதவி தடையின்றி கிடைக்கும்.

danush

தனுசு

இன்று உங்களுக்கு குடும்பத்தில் உள்ளவர்களால் மனமகிழ்ச்சி கூடும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். தொழில் சம்பந்தமாக பெரிய மனிதர்களை சந்திக்க நேரிடும். நவீனகரமான பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும்.

magaram

மகரம்

இன்று உங்களுக்கு பணவரவில் தடை தாமதங்கள் ஏற்படலாம். உறவினர்கள் வழியில் வீண் பிரச்சினைகள் உண்டாகும். செய்யும் செயல்களில் கவனம் தேவை. திருமண சுபமுயற்சிகள் அனுகூலமான பலன்களை தரும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

kumbam

கும்பம்

இன்று பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். வேலை சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். ஊழியர்களின் ஒத்துழைப்பால் தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பணவரவில் இருந்த தடைகள் நீங்கும். தேவைகளை பூர்த்தி செய்து விடுவீர்கள்.

meenam

மீனம்

இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe