Skip to main content

தினசரி ராசிபலன்- 22.06.2021

Published on 22/06/2021 | Edited on 22/06/2021

மிதுனம்
இன்று எதிர்பாராத வகையில் திடீர் தனவரவு உண்டாகும். வியாபாரத்தில் எதிரிகளால் இருந்த பிரச்சினைகள் விலகும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் முன்னேற்றம் ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகமாகும்.

kadagam

கடகம்
இன்று எடுத்த காரியத்தை முடிப்பதற்கு சற்று கால தாமதமாகும். குடும்பத்தினரை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

5

சிம்மம்
இன்று புது உற்சாகத்துடன் அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். சிலருக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். மன அமைதி ஏற்படும்.

kannirasi

கன்னி
இன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு ஆனந்தத்தை தரும். தொழில் வியாபாரத்தில் பணியாட்கள் தம் பொறுப்பு அறிந்து செயல்படுவார்கள். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு உத்தியோக உயர்வு உண்டாகும். 

thulam

துலாம்
இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அடைவதில் சிக்கல்கள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் ஆர்வம் குறையும். உத்தியோகஸ்தர்கள் செய்யும் வேலைகளில் கவனமுடன் செயல்பட்டால் வெற்றி அடைய முடியும். தெய்வ வழிபாடு நல்லது.

viruchagam

விருச்சிகம்
இன்று குடும்பத்தில் பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். மற்றவர்களுக்கு உதவும் வகையில் பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். 

danush

தனுசு
இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாக இருக்கும். உத்தியோகத்தில் சிறு வேலையை செய்வதற்கு கூட அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களால் அனுகூலங்கள் உண்டாகும்.

magaram

மகரம்
இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வீட்டில் பிள்ளைகளால் இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.

kumbam

கும்பம்
இன்று தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிடைக்கும். சுப முயற்சிகளில் முன்னேற்றங்கள் உண்டாகும். ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை குறையும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு அமையும்.

meenam

மீனம்
இன்று நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதற்கு தடங்கல்கள் ஏற்படலாம். குடும்பத்தினருடன் தேவையற்ற மனஸ்தாபம் தோன்றும். உங்கள் ராசிக்கு காலை 9.00 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது நல்லது. வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும்.