Skip to main content

இன்றைய ராசிபலன் – 22.01.2024

Published on 22/01/2024 | Edited on 22/01/2024
Today rasi palan – 22-01-2024

இன்றைய  பஞ்சாங்கம்

22-01-2024, தை 08, திங்கட்கிழமை, துவாதசி திதி இரவு 07.52 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. மிருகசீரிஷம் நட்சத்திரம் பின்இரவு 04.58 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 

இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

ராசிபலன் -  22-01-2024

mesham

மேஷம்

இன்று உங்களுக்கு அசையா சொத்து வழியில் செலவுகள் ஏற்படக்கூடும். உடன் பிறந்தவர்களிடம் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் கிட்டும்.

reshabam

ரிஷபம்

இன்று இல்லத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். எந்த வேலையையும் புது பொலிவுடனும், தெம்புடனும் செய்து முடிப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களில் அனுகூலப் பலன் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.

3

மிதுனம் 

இன்று வேலையில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் மந்த நிலை தோன்றும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கலாம். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டாகும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.


kadagam

கடகம்

இன்று நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதில் சற்று சிரமம் ஏற்படும். உறவினர்கள் வழியில் வீண் பிரச்சினைகள் தேடி வரலாம். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.

5

சிம்மம்

இன்று இனிய செய்திகள் வந்து இல்லத்தை மகிழ்விக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளின் பழக்கத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில்  எதிர்பாராத லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.

 

kannirasi

கன்னி

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உடலில் சிறு உபாதைகள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு மாலை 04.22 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானமாகவும் சிக்கனமாகவும் செயல்படுவது நல்லது. பொருளாதார ரீதியான பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.
 

thulam

துலாம்

இன்று நீங்கள் சோர்வுடனும் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு காலை 08.52 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் தடை தாமதம் ஏற்படும். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது உத்தமம். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

viruchagam

விருச்சிகம்

இன்று உங்கள் ராசிக்கு மாலை 04.22 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் பெரியவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பேச்சில் நிதானத்துடன் இருப்பது நல்லது.

 

danush

தனுசு

இன்று நீங்கள் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். திருமண பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினை தீரும். பெரியவர்களின் நட்பு கிட்டும். தேவைகள் யாவும் நிறைவேறும்.



magaram

மகரம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படலாம். விட்டு கொடுத்து சென்றால் பண பிரச்சினைகள் குறையும். தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் அனுகூலம் கிட்டும்.

kumbam

கும்பம்

இன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் நல்ல செய்திகள் வரும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். அசையா சொத்துக்களால் அனுகூலப் பலன் உண்டாகும். வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறைந்து முன்னேற்றம் ஏற்படும். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.

meenam

மீனம்

இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றி அடைவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் உதவியால் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். சுபசெலவுகள் ஏற்படும். புதிய பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.