Skip to main content

இன்றைய ராசிப்பலன் - 21.07.2018

Published on 21/07/2018 | Edited on 21/07/2018

கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001
 

21-07-2018, ஆடி 05, சனிக்கிழமை, நவமி திதி பகல் 01.44 வரை பின்பு வளர்பிறை தசமி. சுவாதி நட்சத்திரம் காலை 09.07 வரை பின்பு விசாகம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

இராகு காலம் - காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
 

meshamமேஷம்

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். சேமிப்பு உயரும்.
 

reshabamரிஷபம்

இன்று அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோகத்தில் புதிய நபரின் அறிமுகம் கிட்டும். வருமானம் பெருகும்.

 

 

3மிதுனம்

இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். அலுவலகத்தில் வேலைபளு கூடும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதமாகும். தொழிலில் இதுவரை இருந்த பிரச்சனைகள் சற்று குறையும். குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். உறவினர்கள் மூலம் உதவிகள் கிட்டும்.
 

kadagamகடகம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். நண்பர்களின் ஆலோசனைகளால் தொழில் ரீதியான பிரச்சினைகள் குறையும். சிக்கனமாக செயல்பட்டால் பணபற்றாக்குறை நீங்கும். கடன்கள் ஓரளவு குறையும். மனஅமைதி இருக்கும்.
 

5சிம்மம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சிகள் நடைபெறும். உடல் உபாதைகள் நீங்கி சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும்.
 

kannirasiகன்னி

இன்று நீங்கள் எந்த செயலிலும் புது உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத சுபசெலவுகள் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் சிறப்பாக நடைபெற்று லாபம் உண்டாகும்.
 

thulamதுலாம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் எதிரிகளால் இருந்த தொல்லைகள் ஓரளவு குறையும்.
 

viruchagamவிருச்சிகம்

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். உடல்நிலையில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் சிறுசிறு மாறுதல் செய்தால் லாபம் அடையலாம். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.
 

danushதனுசு

இன்று உங்களுக்கு வியாபார ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். பிள்ளைகளால் மன கஷ்டங்கள் தோன்றும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று தேவைகள் பூர்த்தியாகும்.
 

magaramமகரம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நீண்ட நாள் எதிர்பார்த்த தொழில் ரீதியான வங்கி கடன் கிடைக்கும். சுப பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும். வேலையில் புதிய வாய்ப்புகள் கிட்டும். வருமானம் பெருகும்.

 

 

kumbamகும்பம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் ஏற்படும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். நண்பர்கள் உதவிகரம் நீட்டுவர்.
 

meenamமீனம்

இன்று நீங்கள் சோர்வுடனும் சுறுசுறுப்பின்றியும் காணப்படுவீர்கள். தேவையில்லாத டென்ஷன் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்துடனும் எச்சரிக்கையுடனும் செயல்படுவது நல்லது.