இன்றைய ராசி பலன் - 20.11.2024

Today rasi palan - 20.11.2024

இன்றைய பஞ்சாங்கம்

20-11-2024, கார்த்திகை 05, புதன்கிழமை, பஞ்சமி திதி மாலை 04.50 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. புனர்பூசம் நட்சத்திரம் பகல் 02.50 வரை பின்பு பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

இன்றைய ராசி பலன் - 20.11.2024

mesham

மேஷம்

இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். செய்யும் செயல்களில் காலதாமதம் ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களில் அலைச்சலுக்கு பிறகே லாபம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.

reshabam

ரிஷபம்

இன்று உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வேலையில் சக ஊழியர்களுடன் சுமூக உறவு ஏற்படும்.

3

மிதுனம்

இன்று வேலையில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்கும் சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் உதவியால் சிக்கல்கள் ஓரளவு குறையும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவு கிட்டும். எதிலும் நிதானம் தேவை.

kadagam

கடகம்

குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உடல்நிலை சீராகும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சுபகாரியம் கைகூடும். வழக்கு போன்ற விஷயங்களில் அனுகூலப் பலன் கிட்டும்.

5

சிம்மம்

இன்று நீங்கள் எடுக்கும் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வண்டி வாகனங்களால் விரயங்கள் ஏற்படலாம். உறவினர்கள் வழியாக உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும்.

kannirasi

கன்னி

இன்று பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும்.

thulam

துலாம்

இன்று நீங்கள் எந்த செயலையும் மனமகிழ்ச்சியுடன் செய்வீர்கள். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். உடல் ஆரோக்கியம் சீராகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

viruchagam

விருச்சிகம்

இன்று நீங்கள் ஆரோக்கிய ரீதியாக பலவீனமாக காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு பகல் 10.07 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எடுக்கும் காரியங்களை முடிப்பதில் தாமதம் உண்டாகும். குடும்பத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் சாதகப்பலன் கிட்டும்.

danush

தனுசு

இன்று உங்கள் ராசிக்கு பகல் 10.07க்கு மேல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எந்த ஒரு செயலிலும் மனக்குழப்பத்துடன் செயல்படுவீர்கள். வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பது, வெளியூர் பயணங்களை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.

magaram

மகரம்

இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்விக்கான வங்கி கடன் கிடைக்கும். தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வேலையில் மேலதிகாரிகளால் அனுகூலம் கிட்டும். புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

kumbam

கும்பம்

இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறுவதில் சில இடையூறுகள் ஏற்படலாம். பூர்வீக சொத்துகளால் தேவையற்ற அலைச்சல்களும் வீண் விரயங்களும் ஏற்படும். வியாபார ரீதியான பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும். உறவினர்கள் உதவியால் பணப்பிரச்சினைகள் குறையும்.

meenam

மீனம்

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் ஆர்வம் குறைந்து காணப்படும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். உறவினர்களின் உதவியால் பணப்பிரச்சினை குறையும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும்.

இதையும் படியுங்கள்
Subscribe