ADVERTISEMENT

தினசரி ராசிபலன்- 18.12.2022

11:53 PM Dec 17, 2022 | kalaimohan

மிதுனம்

இன்று எந்த ஒரு செயலிலும் பிடிப்பு இல்லாமல் செயல்படுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். தேவைகள் பூர்த்தியாகும்.



கடகம் இன்று பிள்ளைகளால் சுப செலவுகள் ஏற்படலாம். உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான நிகழச்சிகள் நடைபெறும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். பெரியவர்களின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும். வீட்டில் பெண்களுக்கு பணி சுமை ஓரளவு குறையும்.



சிம்மம்

இன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். சுப முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். நண்பர்களால் மன அமைதி சற்று குறையும். பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.





கன்னி

இன்று பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் பிரச்சினை தீரும்.






துலாம்

இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும். பிள்ளைகளுக்கு வயிறு சம்மந்தப்பட்ட உபாதைகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். சற்று கவனத்துடன் செயல்பட்டால் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறைந்து அமைதி நிலவும்.

விருச்சிகம்

இன்று பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை கூடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். புதிய பொருட்கள் சேரும்.




தனுசு

இன்று எடுக்கும் முயற்சிகளில் எல்லாம் வெற்றி உண்டாகும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.





மகரம்

இன்று பணவரவு சுமாராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணபற்றாக்குறையை தவிர்க்கலாம். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.



கும்பம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கை வேண்டும். எதிலும் கவனம் தேவை.







மீனம்


இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் லாபகரமாக இருக்கும். சேமிப்பு பெருகும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT