Today rasi palan-18.05.2025

இன்றைய பஞ்சாங்கம்

18-05-2025, வைகாசி 04, ஞாயிற்றுக்கிழமை, பஞ்சமி திதி காலை 05.58 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. உத்திராடம் நட்சத்திரம் மாலை 06.52 வரை பின்பு திருவோணம். நாள் முழுவதும் அமிர்தயோகம். சஷ்டி விரதம். திருக்கணித ராகு-கேது பெயர்ச்சி இரவு 7.38. முருக வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

Advertisment

இராகு காலம் - மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00.

இன்றைய ராசிபலன் - 18.05.2025

mesham

Advertisment

மேஷம்

இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.

reshabam

ரிஷபம்

இன்று பணவரவு சிறப்பாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். சுபமுயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். நண்பர்களால் மன நிம்மதி குறையும். பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

3

மிதுனம்

இன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல் ஏற்படலாம். வயதில் பெரியவர்களிடம் வாக்குவாதங்களை தவிர்க்கவும். சுபகாரிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

kadagam

கடகம்

இன்று எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி உண்டாகும். உறவினர்களின் ஆதரவால் இல்லத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

5

சிம்மம்

இன்று உடன் பிறந்தவர்கள் வாயிலாக சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.

kannirasi

கன்னி

இன்று எந்த ஒரு செயலிலும் ஈடுபாடில்லாமல் செயல்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். வியாபாரத்தில் வருமானம் சுமாராக இருக்கும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும்.

thulam

துலாம்

இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உறவினர்களால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். பெரியவர்களின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு நம்பிக்கையை தரும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வீட்டில் பெண்களின் பணிச்சுமை குறையும்.

viruchagam

விருச்சிகம்

இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதில் ஆர்வம் அதிகமாகும். உற்றார் உறவினர்களின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சியை அளிக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும்.

danush

தனுசு

இன்று பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். நண்பர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும். உடலில் சிறுசிறு உபாதைகள் தோன்றி மறையும். உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். வியாபார ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

magaram

மகரம்

இன்று பணவரவில் இருந்த தடைகள் விலகும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுபகாரிய பேச்சுக்களில் சாதகப் பலன் கிட்டும். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை கூடும். தொழில் வியாபாரத்தில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

kumbam

கும்பம்

இன்று குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படும் சூழ்நிலை உருவாகும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். பொருளாதார ரீதியாக இருந்த பிரச்சினைகள் சற்று குறையும்.

meenam

மீனம்

இன்று பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். கடன் பிரச்சினை தீரும்.