Advertisment

இன்றைய ராசிபலன் -17.12.2023

nn

இன்றைய பஞ்சாங்கம்

Advertisment

17-12-2023, மார்கழி 01, ஞாயிற்றுக்கிழமை, பஞ்சமி திதி மாலை 05.33 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. அவிட்டம் நட்சத்திரம் பின்இரவு 02.54 வரை பின்பு சதயம். மரணயோகம் பின்இரவு 02.54 வரை பின்பு சித்தயோகம். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் - மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00.

இன்றைய ராசிபலன் - 17-12-2023

mesham

மேஷம்

Advertisment

இன்று உங்களுக்கு வியாபாரம் சிறப்பாக நடைபெறும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். பணவரவு தாராளமாக இருக்கும். பூர்வீக சொத்து சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் சாதகமாக முடியும்.

reshabam

ரிஷபம்

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட கால தாமதமாக முடியும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் நிறைவேற தடைகள் ஏற்படும். சிக்கனமாக செயல்பட்டால் கடன்கள் ஓரளவு குறையும்.

3

மிதுனம்

இன்று உங்களுக்கு பணிசுமை கூடுதலாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு பிற்பகல் 03.44 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் எதிலும் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் மதியத்திற்கு பின் சாதகப்பலன் கிட்டும்.

kadagam

கடகம்

இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். இன்று உங்கள் ராசிக்கு பிற்பகல் 03.44 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை.

5

சிம்மம்

இன்று உங்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் எதிர்பாராத இனிய நிகழ்வுகள் நடைபெறும். வியாபாரத்தில் பணிபுரிபவர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். கடன் பிரச்சினைகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

kannirasi

கன்னி

இன்று உங்கள் பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் உதவி மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். வருமானம் பெருகும்.

thulam

துலாம்

இன்று நீங்கள் எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றும். வீட்டில் ஒற்றுமை குறையும். எதையும் செய்வதற்கு முன் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. பொருளாதாராம் சுமாராக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

viruchagam

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். ஆரோக்கிய பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். சிலருக்கு புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

danush

தனுசு

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில தடைகள் உண்டாகும். நண்பர்களுடன் மனக்கசப்பு ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம்.

magaram

மகரம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்துடன் வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். வருமானம் பெருகும். திருமண தடைகள் விலகும். உறவினர்கள் வழியில் சுப செய்திகள் வரும்.

kumbam

கும்பம்

இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். உத்தியோக ரீதியாக வீண் அலைச்சல்கள் உண்டாகும். பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் ஏற்படும். சிக்கனமாக செயல்பட்டால் கடன் வாங்குவதை தவிர்க்கலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவு கிட்டும்.

meenam

மீனம்

இன்று உங்கள் பேச்சு திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். வங்கி சேமிப்பு உயரும்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe