Today rasi palan - 11.02.2025

இன்றைய பஞ்சாங்கம்

17-02-2025, மாசி 05, திங்கட்கிழமை, பஞ்சமி திதி பின்இரவு 04.54 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. நாள் முழுவதும் சித்திரை நட்சத்திரம். நாள் முழுவதும் பிரபாலரிஷ்ட யோகம்.

Advertisment

இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

இன்றைய ராசிபலன் - 17.02.2025

mesham

Advertisment

மேஷம்

இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக இருந்த நெருக்கடிகள் குறையும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி உண்டாகும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் லாபத்தை அடைய முடியும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

reshabam

ரிஷபம்

இன்று குடும்பத்தில் எதிர்பாராத இனிய நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளால் பெருமை சேரும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். திடீர் தனவரவு உண்டாகும்.

3

மிதுனம்

இன்று நீங்கள் செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். பயணங்களால் அலைச்சல் சோர்வு உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் நற்பலன்கள் கிட்டும்.

kadagam

கடகம்

இன்று அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும்.

5

சிம்மம்

இன்று உத்தியோகத்தில் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்படும். நண்பர்களின் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் சற்று குறையும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.

kannirasi

கன்னி

இன்று நீங்கள் எந்த செயலிலும் புது உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நிகழும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

thulam

துலாம்

இன்று உங்களுக்கு வர வேண்டிய பணவரவில் தடை தாமதங்கள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவ பேச்சில் கவனத்துடன் இருப்பது நல்லது. வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சியில் அனுகூலப்பலன் உண்டாகும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.

viruchagam

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். பிள்ளைகள் மூலம் சுப செய்திகள் கிடைக்கும். சிலருக்கு புதிய வண்டி, வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும்.

danush

தனுசு

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். உறவினர்களின் உதவியால் பிரச்சினைகள் தீரும். வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும்.

magaram

மகரம்

இன்று குடும்பத்தில் வீண் செலவுகள் ஏற்படலாம். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும்.

kumbam

கும்பம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வீண் பேச்சை குறைப்பது நல்லது. உங்கள் ராசிக்கு மாலை 06.02 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளை முடிந்தவரை தள்ளி வைப்பது, கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது.

meenam

மீனம்

இன்று உங்களுக்கு மன உளைச்சல், தேவையில்லாத டென்ஷன் ஏற்படும். உங்கள் ராசிக்கு மாலை 06.02 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தாமதங்கள் உண்டாகும். வேலையில் மேலதிகாரிகளிடம் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பயணங்களை தவிர்ப்பது நல்லது.