ADVERTISEMENT

இன்றைய ராசிப்பலன் - 15.06.2019

12:46 AM Jun 15, 2019 | Anonymous (not verified)

கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

ADVERTISEMENT

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001

ADVERTISEMENT


இன்றைய பஞ்சாங்கம்

15-06-2019, வைகாசி 32, சனிக்கிழமை, திரியோதசி திதி பிற்பகல் 02.33 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. விசாகம் நட்சத்திரம் காலை 09.59 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. லஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது.
இராகு காலம் - காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

மேஷம்

இன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. தூரப் பயணங்களில் கவனம் தேவை.

ரிஷபம்

இன்று நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.

மிதுனம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். கொடுத்த கடன் வசூலாகும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும்.

கடகம்

இன்று குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். பிள்ளைகள் வழியில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். கடன் பிரச்சினை ஓரளவு குறையும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு பணபற்றாக்குறை ஏற்படலாம். குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உறவினர்களால் தேவையில்லாத மனசங்கடங்கள் உண்டாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் லாபம் பெருகும்.

கன்னி

இன்று தொழில் வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். வெளிக்கடன்கள் இன்று வசூலாகும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்.

துலாம்

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் ஈடுபாடு குறையும். சுபமுயற்சிகளில் தடங்கல்கள் ஏற்படலாம். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். நண்பர்களின் ஆலோசனைகள் புது தெம்பை தரும். தொழிலில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் பெறலாம். மன நிம்மதி ஏற்படும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடன் இருப்பவர்களால் அனுகூலங்கள் உண்டாகும். வியாபாரத்தில் உங்கள் புகழ் மேலோங்கும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும். நண்பர்கள் தேவையறிந்து உதவுவார்கள்.

தனுசு

இன்று குடும்பத்தில் திடீர் செலவுகள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. பிள்ளைகளால் பெருமை சேரும். வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும்.

மகரம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நல்ல லாபம் கிட்டும். பொன் பொருள் சேரும்.

கும்பம்

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் பாசத்துடன் இருப்பார்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு அமையும். தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகி லாபம் பெருகும். சிலருக்கு உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

மீனம்

இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றி அடைய உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT