ADVERTISEMENT

இன்றைய ராசிபலன் -13.04.2024

11:54 PM Apr 12, 2024 | kalaimohan

ADVERTISEMENT

இன்றைய பஞ்சாங்கம்

ADVERTISEMENT

13-04-2024, பங்குனி 31, சனிக்கிழமை, பஞ்சமி திதி பகல் 12.04 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. மிருகசீரிஷம் நட்சத்திரம் இரவு 12.49 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம்.

இராகு காலம் - காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

இன்றைய ராசி பலன் - 13.04.2024

மேஷம்

இன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகலாம். உறவினர்கள் உதவியால் சுபகாரிய முயற்சிகளில் சாதகப் பலன் கிட்டும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். ஆன்மீக செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

ரிஷபம்

இன்று நீங்கள் ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலருக்கு அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள்.


மிதுனம்

இன்று வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் பிள்ளைகளுடன் வீண் மனஸ்தாபங்கள் உண்டாகும். உறவினர்களின் உதவியால் பிரச்சினைகள் ஓரளவுக்கு குறையும். நண்பர்களின் சந்திப்பு ஆறுதலை தரும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமின்றி கிடைக்கும்.


கடகம்

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகி ஒற்றுமை நிலவும். பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். சிலருக்கு மேற்படிப்பிற்காக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.

சிம்மம்

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக வராத கடன்கள் இன்று வசூலாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் நட்பால் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

கன்னி

இன்று குடும்பத்தில் எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படலாம். தொழிலில் சற்று மந்த நிலை காணப்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வேலையில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் கிட்டும். மன நிம்மதி ஏற்படும்.

துலாம்

இன்று நீங்கள் எதிர்பாராத வகையில் வீண் பிரச்சினைகள் தேடி வரும். உங்கள் ராசிக்கு பகல் 12.44 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் உணர்ச்சிவசப் படாமல் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. வெளியூர் பயணங்களையும் புதிய முயற்சிகளையும் மதியத்திற்கு மேல் மேற்கொள்வது நல்லது.

விருச்சிகம்

இன்று உங்கள் ராசிக்கு பகல் 12.44 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் சற்று மனகுழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரை நம்பி பெரிய தொகையை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருந்தால் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

தனுசு

இன்று நீங்கள் செய்யும் வேலைகளில் ஆர்வத்தோடு ஈடுபடுவீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும்.

மகரம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். குடும்பத்தில் மனைவி வழியாக நல்லது நடக்கும். வியாபாரத்தில் உழைப்பிற்கேற்ற பலன்கள் கிடைக்கும்.


கும்பம்

இன்று நீங்கள் எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். உத்தியோக ரீதியாக மேற்கொள்ளும் பயணத்தால் நற்பலன்கள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.

மீனம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். உறவினர்கள் வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் நற்பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். கடன் பிரச்சினைகள் குறையும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT