ADVERTISEMENT

தினசரி ராசிபலன் - 12.07.2020

08:05 AM Jul 12, 2020 | santhoshb@nakk…

கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,

ADVERTISEMENT

இன்றைய பஞ்சாங்கம்

ADVERTISEMENT

12-07-2020, ஆனி 28, ஞாயிற்றுக்கிழமை, சப்தமி திதி பகல் 03.48 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. உத்திரட்டாதி நட்சத்திரம் காலை 08.18 வரை பின்பு ரேவதி. நாள் முழுவதும் அமிர்த யோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1/2. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் - மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00,

தினசரி ராசிபலன் - 12.07.2020

மேஷம் இன்று நீங்கள் எடுக்கும் காரியங்களில் தடை தாமதங்கள் உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். எந்த ஒரு விஷயத்திலும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்பட்டால் அனுகூலப் பலனை அடைய முடியும். சகோதர சகோதரிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு அதிகாலையிலே சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளால் உங்கள் மதிப்பு கூடும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும்.


மிதுனம்
இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.தொழிலில் அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் நற்பலன் கிடைக்கும். வம்பு வழக்கு போன்ற விஷயங்களில் சாதகப் பலன் கிட்டும். திடீர் பணவரவுகள் மகிழ்ச்சியை அளிக்கும்.

கடகம்
இன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை இருக்கும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் விலகும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.


சிம்மம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் நிலையில் சோர்வும் தேவையற்ற மனகுழப்பமும் ஏற்படும். மற்றவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் போது அதிக கவனம் தேவை.


கன்னி
இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் மூலம் மன அமைதி ஏற்படும். பணி புரிவோர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள்.


துலாம்
இன்று உங்களுக்கு எதிர்பாராத வகையில் சுபசெலவுகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் இருந்த நெருக்கடிகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு உபாதைகள் ஏற்பட்டாலும் பாதிப்புகள் உண்டாகாது. சிலருக்கு வெளியூர் பயணங்கள் செல்லும் வாய்ப்பு அமையும்.


விருச்சிகம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் பெரியவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் தோன்றும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.


தனுசு
இன்று நீங்கள் சிறு மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். உறவினர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிட்டும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.


மகரம்
இன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். வியாபார ரீதியாக வெளிமாநில நபர்கள் மூலம் அனுகூலப்பலன்கள் பெறுவர். கடன் பிரச்சினைகள் சற்று குறையும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். சுப காரிய முயற்சிகளில் சாதகப் பலன் கிடைக்கும்.

கும்பம்
இன்று உங்களுக்கு உடல் சோர்வால் செய்யும் செயல்களில் தாமதம் உண்டாகும். வண்டி வாகனங்களால் சிறு சிறு விரயங்கள் ஏற்படும். சொத்து சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் சுமூகமாக முடியும். தொழில் ரீதியான பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலப் பலன் கிட்டும்.


மீனம்
இன்று வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்து நல்ல லாபத்தை அடைவீர்கள். நண்பர்களின் உதவி கிட்டும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT