Skip to main content

தினசரி ராசிபலன்- 11.08.2021

Published on 10/08/2021 | Edited on 10/08/2021

மிதுனம்
இன்று உங்களுக்கு விடியற்காலையிலே வியத்தகு செய்திகள் வந்து சேரும். பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். பொன் பொருள் சேரும்.

kadagam

கடகம்
இன்று உங்களுக்கு மனதில் குழப்பமும் கவலையும் உண்டாகும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். பிள்ளைகளால் மனநிம்மதி குறையும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் கூட்டாளிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். எதிர்பாராத உதவி கிடைக்கும்.

5

சிம்மம்
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். திருமண சுப முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். வேலையில் உடன் பணி புரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன்கள் இன்று வசூலாகும்.

kannirasi

கன்னி
இன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். பிள்ளைகளுக்கு படிப்பில் சற்று மந்த நிலை ஏற்படும். வேலையில் மேலதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை தரும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

thulam

துலாம்
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து முடிப்பீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்புகள் உருவாகும். தொழில் சம்பந்தமான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

viruchagam

விருச்சிகம்
இன்று உங்கள் வீட்டிற்கு புதிய பொருட்கள் வந்து சேரும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். தொழிலில் எதிரிகளால் இருந்த தொல்லைகள் நீங்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். வருமானம் இரட்டிப்பாகும்.

danush

தனுசு
இன்று நீங்கள் மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். உறவினர்களின் உதவியால் பிரச்சினைகள் ஓரளவு குறையும். பொறுமையுடன் இருப்பது நல்லது.

magaram

மகரம்
இன்று நீங்கள் பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு பகல் 03.23 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாத நபரிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். மதியத்திற்கு பின் மனஅமைதி உண்டாகும்.

kumbam

கும்பம்
இன்று நீங்கள் ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும்.  வியாபாரத்தில் வீண் பிரச்சினைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு பகல் 03.23 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.

meenam

மீனம்
இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் பொறுப்பாக இருப்பார்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். நண்பர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். மன நிம்மதி ஏற்படும்.