Skip to main content

இன்றைய ராசிப்பலன் - 11.06.2018

Published on 11/06/2018 | Edited on 11/06/2018

கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001


11-06-2018, வைகாசி 28, திங்கட்கிழமை, துவாதசி திதி பகல் 10.04 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. பரணி நட்சத்திரம் இரவு 09.05 வரை பின்பு கிருத்திகை. சித்தயோகம் இரவு 09.05 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. பிரதோஷம். சிவ வழிபாடு நல்லது. 


இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.
 

meshamமேஷம்

இன்று உடல் நிலை மிக சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் உங்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பழைய கடன்கள் தீரும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.
 

 

reshabamரிஷபம்

இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். சுப முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பணவரவு  சுமாராக இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
 

3மிதுனம்

இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் செயல்படுவார்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் தொழிலில் உள்ள பிரச்சனை குறையும். சிலருக்கு ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும்.
 

 

 

kadagamகடகம்

இன்று நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றியை கொடுக்கும். குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். சுபசெலவுகள் ஏற்படும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும். தொழிலில் உள்ள போட்டி பொறாமை குறைந்து லாபம் பெருகும். 
 

5சிம்மம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வருமானம் இரட்டிப்பாகும்.
 

kannirasiகன்னி

இன்று உங்களுக்கு மன அமைதி குறையும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எளிதில் முடிய வேண்டிய செயல்கள் கூட கால தாமதமாகும். எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது உத்தமம். பணியில் கவனம் தேவை.
 

 

 

thulamதுலாம்

இன்று தொழில் ரீதியாக பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு பொன்பொருள் வாங்கும் யோகம் உண்டு. பழைய பாக்கிகள் வசூலாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.
 

viruchagamவிருச்சிகம்

இன்று தொழில் வியாபாரத்தில் அமோகமான பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு தங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் கூடும். கடன் பிரச்சனைகள் தீரும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.
 

danushதனுசு

இன்று தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்படும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகமாகும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு புது தெம்பை தரும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. 
 

magaramமகரம்

இன்று உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சனையை தவிர்க்கலாம். நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். தொழிலில் ஓரளவு லாபம் இருக்கும்.
 

kumbamகும்பம்

இன்று நீங்கள் உற்சாகத்துடனும் சுறுசுறுப்புடனும் இருப்பீர்கள். தொழில் ரீதியான பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும். பிள்ளைகள் வழியில் சுப செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபரிபவர்கள் சாதகமாக இருப்பார்கள். மனைவியால் நற்பலன் ஏற்படும். சேமிப்பு உயரும்.
 

meenamமீனம்

இன்று உங்களுக்கிருந்த பிரச்சினைகள் குறைந்து நிம்மதி ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். உறவினர்கள் உங்கள் செயல்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும்.













 

 

Next Story

இன்றைய ராசிபலன் -24.05.2024

Published on 23/05/2024 | Edited on 24/05/2024
Today rasi palan - 26.04.2024

இன்றைய  பஞ்சாங்கம்

24-05-2024, வைகாசி 11, வெள்ளிக்கிழமை, பிரதமை திதி இரவு 07.25 வரை பின்பு தேய்பிறை துதியை. அனுஷம் நட்சத்திரம் பகல் 10.10 வரை பின்பு கேட்டை. சித்தயோகம் பகல் 10.10 வரை பின்பு மரணயோகம். அம்மன் வழிபாடு நல்லது. 

இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00 

இன்றைய ராசி பலன் - 24.05.2024

mesham

மேஷம்

.இன்று நீங்கள் எதிர்பாராத வகையில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வேலையில் பிறரை நம்பி எந்த பொறுப்பையும் கொடுக்காமல் இருப்பது உத்தமம்.
 

reshabam

ரிஷபம்

இன்று வீட்டில் சுபசெலவுகள் ஏற்படும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு பணி சுமையை குறைக்கும். தொழில் வளர்ச்சிக்காக அரசு வழி உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.



3

மிதுனம் 

இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும்.


kadagam

கடகம்

இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். எந்த காரியத்தையும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி பெறலாம். தெய்வ வழிபாடு நன்மையை தரும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
 

5

சிம்மம்

இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் மனகசப்பு உண்டாகலாம். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வேலையில் ஏற்படும் பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வர். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
 

kannirasi

கன்னி

இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகள் வழியில் பெருமை சேரும். தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் நற்பலன்கள் கிட்டும். வேலையில் சக ஊழியர்கள் ஆதுரவாக செயல்படுவார்கள்.
 

thulam

துலாம்

இன்று எதிர்பாராத வகையில் திடீர் செலவுகள் உண்டாகும். வீட்டில் பெரியவர்களுடன் சிறு சிறு மனசங்கடங்கள் தோன்றும். முயற்சி செய்தால் எடுக்கும் காரியத்தில் முன்னேற்றம் அடையலாம். உத்தியோகத்தில் புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.
 

viruchagam

விருச்சிகம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். வருமானம் இரட்டிப்பாகும். தேவைகள் பூர்த்தியாகும்.

danush

தனுசு

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் நிதானம் தேவை. வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும். வியாபாரத்தில் இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள் குறையும்.



magaram

மகரம்

இன்று குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் மறையும். அனுபவம் உள்ளவர்களின் அறிவுரைகளால் தொழில் வியாபாரத்தில் லாபம் ஏற்படும்.  வேலையில் சக ஊழியர்களுடன் இருந்த பிரச்சினைகள் தீரும். பயணங்களால் அனுகூலம் கிட்டும்.

kumbam

கும்பம்

இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். பெண்கள் வகையில் ஒருசில அனுகூலங்கள் உண்டாகும். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.

meenam

மீனம்

இன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். வியாபாரத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். கடன்கள் ஓரளவு குறையும். 

Next Story

இன்றைய ராசிபலன் - 08.02.2024

Published on 07/02/2024 | Edited on 08/02/2024
Today rasi palan – 23-01-2024

இன்றைய  பஞ்சாங்கம்

08.02.2024, தை - 25, வியாழக்கிழமை, திரியோதசி திதி பகல் 11.17 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி, உத்திராடம் நட்சத்திரம் பின் இரவு 02.14 வரை பின்பு திருவோணம், நாள் முழுவதும் சித்தயோகம், மாத சிவராத்திரி, சிவ வழிபாடு நல்லது, சுபமுகூர்த்த நாள், சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

ராசி பலன் -  08-02-2024

mesham

மேஷம்

இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் இருக்கும். உறவினர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் லாபம் பெருகும்.

reshabam

ரிஷபம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். புதிய முயற்சிகளில் தடங்கல்கள் ஏற்படக்கூடும். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். உங்கள் ராசிக்கு பகல் 10.40 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. மதியத்திற்கு பின் மனகுழப்பம் குறையும்.

3

மிதுனம் 

இன்று உங்கள் ராசிக்கு பகல் 10.40 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். பிறரை நம்பி எந்த காரியத்திலும் ஈடுபடாமல் இருப்பது உத்தமம். வெளி இடங்களில் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.


kadagam

கடகம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். விரும்பிய பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும்.
 

5

சிம்மம்

இன்று குடும்பத்தில் உறவினர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் குறைந்து சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வேலையில் உடன் இருப்பவர்களால் அனுகூலம் கிட்டும். தொழிலில் இருந்த மந்த நிலை மாறி முன்னேற்றம் ஏற்படும். வருமானம் சிறப்பாக இருக்கும்.

kannirasi

கன்னி

இன்று நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதற்கு தடங்கல்கள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் தேவையற்ற மனஸ்தாபம் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். கொடுத்த கடன் வசூலாகும்.
 

thulam

துலாம்

இன்று உங்களுக்கு திடீர் தனவரவுகள் உண்டாகும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சிலருக்கு பிள்ளைகள் வழியில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபார ரீதியான பயணங்களால் லாபகரமான பலன்கள் கிடைக்கும்.

viruchagam

விருச்சிகம்

இன்று உங்களுக்கு வியத்தகு செய்திகள் வந்து சேரும். திருமண பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் அதிக லாபங்கள் கிடைக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். பயணங்களில் புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். வருமானம் பெருகும். பொன் பொருள் சேரும்.

danush

தனுசு

இன்று நீங்கள் எதிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நிலவும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.

magaram

மகரம்

இன்று உங்கள் பொருளாதார நிலை சற்று சுமாராக இருக்கும். பிள்ளைகள் வகையில் சுபசெலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் சற்று கவனம் தேவை. குடும்பத்தில் பெண்கள் வகையில் அனுகூலங்கள் உண்டாகும்.


kumbam

கும்பம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் செலவுகளும் அதிகரிக்கும். எடுத்த காரியம் நிறைவேற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் ஆதரவு கிட்டும். கடன் பிரச்சினைகள் ஓரளவு தீரும்.

meenam

மீனம்

இன்று உங்களுக்கு உறவினர்களால் அனுகூலம் கிட்டும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சாதகமான பலன்கள் ஏற்படும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கடன்கள் குறையும். வருமானம் அதிகரிக்கும்.