Skip to main content

இன்றைய ராசிப்பலன் -11.02.2023

இன்றைய  பஞ்சாங்கம்

11-02-2023, தை 28, சனிக்கிழமை, பஞ்சமி திதி காலை 09.08 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. சித்திரை நட்சத்திரம் பின்இரவு 01.40 வரை பின்பு சுவாதி. மரணயோகம் பின்இரவு 01.40 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் - காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

 

இன்றைய ராசிப்பலன் -  11.02.2023 

மிதுனம்

இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். சேமிப்பு குறையும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் லாபம் பாதிக்காது. சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிலும் நிதானம் தேவை.




kadagam

கடகம்

இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் செய்யும் சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகளால் தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் இருந்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் இருந்த மன குழப்பங்கள் சற்று குறையும்.



5

சிம்மம்

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் குறையும்.


kannirasi

கன்னி

இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகளால் அமைதி குறையும். பிள்ளைகளால் மன சங்கடங்கள் ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.




thulam

துலாம்

இன்று எந்த செயலிலும் புது உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். சிலருக்கு புதிய பொருட்கள் வாங்கும் யோகம் ஏற்படும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். தொழில் வியாபார ரீதியாக பொருளாதார நிலை மேலோங்கி இருக்கும்.



viruchagam

விருச்சிகம்

.இன்று உடல் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். திருமண முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் சிறு தாமதத்திற்குப் பிறகு அனுகூலப்பலன் உண்டாகும். மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
danush

தனுசு

இன்று குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் திறமைகேற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் போட்டி பொறாமை குறைந்து லாபம் பெருகும்.



magaram

மகரம்

இன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வெளி வட்டார நபர்கள் மூலம் அனுகூலப்பலன்கள் கிட்டும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
 




kumbam

கும்பம்

இன்று உங்களுக்கு எளிதில் முடியும் காரியம் கூட தாமதமாக முடியும். உற்றார் உறவினர்கள் வழியில் வீண் மனஸ்தாபங்கள் உண்டாகும். உங்கள் ராசிக்கு பகல் 01.02 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. புதிய முயற்சிகளை மதியம் வரை தவிர்ப்பது உத்தமம்.



meenam

மீனம்

இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். மன நிம்மதி குறையும். உங்கள் ராசிக்கு பகல் 01.02 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் கவனமும், பேச்சில் நிதானத்துடனும் இருப்பது நல்லது. மற்றவர்களின் பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !