Skip to main content

இன்றைய ராசிபலன்-09.06.2025

Published on 09/06/2025 | Edited on 09/06/2025

 

Today rasi palan-07.06.2025

இன்றைய  பஞ்சாங்கம்

09-06-2025, வைகாசி 26, திங்கட்கிழமை, திரியோதசி திதி காலை 09.36 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. விசாகம் நட்சத்திரம் பகல் 03.31 வரை பின்பு அனுஷம். மரணயோகம் பகல் 03.31 வரை பின்பு சித்தயோகம். வைகாசி விசாகம். லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். முருக வழிபாடு நல்லது. 

இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.
 

இன்றைய ராசிபலன் - 09.06.2025

 mesham

மேஷம்

இன்று நீங்கள் சற்று குழப்பத்துடன் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு காலை 8.50 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பது, எந்த விஷயத்திலும் கவனமாக செயல்படுவது நல்லது. வெளி நபர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

 reshabam

ரிஷபம்

இன்று வீட்டில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் மகிழ்ச்சியை தரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில் ரீதியாக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.


3

மிதுனம்

இன்று எந்த காரியத்திலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உற்றார் உறவினர் வருகையினால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.


kadagam

கடகம்

இன்று வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் சிலருக்கு வேலைபளு அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும்.


 5

சிம்மம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருந்தாலும் உங்கள் தேவைகள் நிறைவேறும். பிள்ளைகளால் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் மறைமுக பிரச்சினைகள் வந்தாலும் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.


kannirasi

கன்னி

இன்று குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். சகோதர, சகோதரிகள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மதிப்பும் மரியாதையும் உயரும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். கடன்கள் குறையும்.


 thulam

துலாம்

இன்று குடும்பத்தில் வரவிற்கு மீறிய செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோக ரீதியாக செல்லும் பயணங்களால் அனுகூலம் கிட்டும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு அமையும்.


 viruchagam

விருச்சிகம்

இன்று நீங்கள் மனமகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கொடுக்கல் வாங்கலில் லாபம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி கிட்டும். அலுவலகங்களில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக இருப்பார்கள். 

 danush

தனுசு

இன்று உங்களுக்கு எதிர்பாராத மருத்துவ செலவுகள் உண்டாகும். உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உத்தியோகத்தில் உங்களின் செயல்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். தொழில் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும்.


magaram

மகரம்

இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் எதிர்பாராத வகையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உறவினர்களுடன் இருந்த பிரச்சினைகள் குறையும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தொழில் ரீதியாக வெளிவட்டார நட்பு ஏற்படும். பழைய பாக்கிகள் வசூலாகும்.


 kumbam

கும்பம்

இன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் அமையும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். நினைத்த காரியம் நிறைவேறும். சுபகாரியம் கைகூடும்.


 meenam

மீனம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். சுப முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். உங்கள் ராசிக்கு காலை 8.50 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் இருப்பது நல்லது. உங்களுக்கு இருந்த பொருளாதார ரீதியான பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.