ADVERTISEMENT

இன்றைய ராசிப்பலன் - 08.06.2019

12:00 AM Jun 08, 2019 | kalaimohan

கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

ADVERTISEMENT

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001

ADVERTISEMENT

இன்றைய பஞ்சாங்கம்
08-06-2019, வைகாசி 25, சனிக்கிழமை, சஷ்டி திதி பின்இரவு 02.55 வரை பின்பு வளர்பிறை சப்தமி. ஆயில்யம் நட்சத்திரம் மாலை 05.21 வரை பின்பு மகம். மரணயோகம் மாலை 05.21 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. சஷ்டி விரதம். முருக- நவகிரக வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் - காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

மேஷம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் உழைப்பிற்கேற்ற பலன் கிட்டும். எதிர்பாராத தன வரவால் மகிழ்ச்சி உண்டாகும். தேவைகள் பூர்த்தியாகும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபம் கிட்டும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உறவினர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளுக்கு நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் உண்டாகும். வீண் செலவுகளால் பணப்பிரச்சினை ஏற்படலாம். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

கடகம்

இன்று நீங்கள் எந்த செயலையும் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டம் நீங்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். வேலையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி லாபம் பெருகும். வருமானம் இரட்டிப்பாகும்.

சிம்மம்

இன்று பிள்ளைகள் மூலம் குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் அடைவீர்கள்.

கன்னி

இன்று குடும்பத்தில் செலவுகள் குறைந்து காணப்படும். உடன்பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களால் அனுகூலம் கிட்டும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழிலில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி கிட்டும்.

துலாம்

.இன்று எந்த ஒரு செயலையும் நம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள். பெரிய மனிதர்களுடன் நட்பு ஏற்படும். நண்பர்கள் உங்களுக்கு அனுகூலமாக இருப்பார்கள். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். தொழில் சம்பந்தபட்ட வழக்குகளில் வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டாகும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படலாம். பிள்ளைகளால் வீண் விரயங்கள் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

தனுசு

இன்று குடும்பத்தில் நிம்மதி இல்லாத சூழ்நிலை உண்டாகும். மனக்குழப்பம் அலைச்சல் சோர்வு ஏற்படும். உங்கள் ராசிக்கு மாலை 05.21 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கோபத்தை குறைத்துக் கொண்டு மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. மதியத்திற்கு பின் மனஅமைதி இருக்கும்.

மகரம்

இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். மற்றவர்கள் மிது தேவையில்லாத கோபம் உண்டாகும். உங்கள் ராசிக்கு மாலை 05.21 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம்.

கும்பம்

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை நிலவும். உறவினர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வேலையில் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிட்டும். பூர்வீக சொத்துக்களில் உள்ள பிரச்சினை தீரும்.

மீனம்

இன்று உங்களுக்கு பொருளாதார நெருக்கடியால் மனஉளைச்சல் ஏற்படலாம். அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் உதவியும் ஒத்துழைப்பும் கிட்டும். வியாபாரத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது நல்லது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT