ADVERTISEMENT

இன்றைய ராசிப்பலன் - 07.05.2019

12:13 AM May 07, 2019 | Anonymous (not verified)

கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

ADVERTISEMENT

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001

ADVERTISEMENT

இன்றைய பஞ்சாங்கம்

07-05-2019, சித்திரை 24, செவ்வாய்க்கிழமை, திரிதியை திதி பின்இரவு 02.17 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. ரோகிணி நட்சத்திரம் மாலை 04.27 வரை பின்பு மிருகசீரிஷம். அமிர்தயோகம் மாலை 04.27 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. அட்சய திருதியை.
இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.


மேஷம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை குறையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் தடைகள் ஏற்படலாம். எதையும் செய்வதற்கு முன் சிந்தித்து செய்வது நல்லது. நெருங்கியவர்களின் உதவியுடன் எதையும் சமாளித்து விடுவீர்கள்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் உறவினர் வருகையால் சந்தோஷம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் வழியாக அனுகூலம் கிட்டும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சேமிப்பு உயரும்.

மிதுனம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு கௌரவ பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதுவரை எதிரியாக இருந்தவர்கள் கூட நண்பராக மாறும் சூழ்நிலை ஏற்படும். நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும்.

கடகம்

இன்று பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். தொழிலில் உள்ள போட்டி பொறாமைகள் ஓரளவு குறையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பொன் பொருள் சேரும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வீண் செலவுகளை தவிர்ப்பதன் மூலம் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். எடுக்கும் காரியங்களில் கவனத்துடன் செயல்பட்டால் முன்னேற்றம் உண்டாகும்.

கன்னி

இன்று நீங்கள் மனக்குழப்பத்துடனும், கவலையுடனும் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் தாமதப்பலன் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்க முடியும்.

துலாம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையில் வீண் பிரச்சினைகள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுக்காமல் இருப்பது உத்தமம். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். புதிய பொருட்களை வாங்குவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். சேமிப்பு உயரும்.
தனுசு

தனுசு

இன்று உறவினர்களால் மனசங்கடங்கள் ஏற்படும். குடும்பத்தில் அமைதி குறையும் சூழ்நிலை உருவாகும். தொழிலில் எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பால் பணிச்சுமை ஓரளவு குறையும்.

மகரம்

குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். சிலருக்கு புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

கும்பம்

இன்று உங்களுக்கு மன அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து ஒற்றுமை நிலவும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். உத்தியோக ரீதியான முயற்சிக்கு அனுகூலப்பலன் கிட்டும். தேவைகள் பூர்த்தியாகும்.

மீனம்

இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக இருந்த நெருக்கடிகள் குறையும். உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும். வியாபார ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். இதுவரை வராத கடன்கள் வசூலாகும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT