தினசரி ராசிபலன்- 05.08.2021

மிதுனம்

இன்று உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். திடீர் என்று வரும் நல்ல செய்தியால் திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும்.

kadagam

கடகம்

இன்று உங்களுக்கு தாராள தன வரவும், மகிழ்ச்சியும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். இதுவரை எதிரியாக இருந்தவர் கூட நண்பராக மாறி செயல்படுவார். தொழில் விஷயமாக வெளிமாநில நபருடன் தொடர்பு கிடைக்கும். வருமானம் பெருகும்.

5

சிம்மம்

இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.

kannirasi

கன்னி

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் படிப்பிற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் அனுகூலமான பலன்கள் ஏற்படும்.

thulam

துலாம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும். வேலையில் எவ்வளவு தான் பாடுபட்டாலும் நல்ல பெயர் எடுக்க முடியாது. சொத்து சம்பந்தமான விஷயங்களில் சற்று சிந்தித்து செயல்பட்டால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

viruchagam

விருச்சிகம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் சற்று மனகுழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரை நம்பி பெரிய தொகையை கடனாக கொடுப்பது அல்லது மற்றவர் வாங்கும் கடனுக்கு முன் ஜாமீன் தருவது போன்ற செயல்களை தவிர்ப்பது உத்தமம். பயணங்களில் கவனம் தேவை.

danush

தனுசு

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். அரசு துறையில் பணிபுரிபவர்க்கு கௌரவ பதவிகள் அமையும். தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். சுபகாரிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.

magaram

மகரம்

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து ஒற்றுமை நிலவும். பிள்ளைகளால் பெருமை சேரும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் கூட்டாளிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.

kumbam

கும்பம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராகதான் இருக்கும். பூர்வீக சொத்துக்களை விற்பதில் அலைச்சல் அதிகரித்தாலும் ஓரளவு லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் ஈடுபடுவோர் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பொருளாதார நெருக்கடிகள் ஓரளவு குறையும்.

meenam

மீனம்

இன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு மருத்துவ செலவுகள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் சற்று கால தாமதம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் அனுகூலப் பலனை அடைய கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. பழைய கடன்கள் வசூலாகும்.

daily rasipalan
இதையும் படியுங்கள்
Subscribe