Skip to main content

இன்றைய ராசிப்பலன் - 05.01.2020

Published on 04/01/2020 | Edited on 05/01/2020

கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001

இன்றைய  பஞ்சாங்கம்

05-01-2020, மார்கழி 20, ஞாயிற்றுக்கிழமை, தசமி திதி பின்இரவு 03.07 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. அஸ்வினி நட்சத்திரம் பகல் 12.27 வரை பின்பு பரணி. சித்தயோகம் பகல் 12.27 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1/2. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். 
இராகு காலம் - மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் -  பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00,  மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00, 
இன்றைய ராசிப்பலன் -  05.01.2020

mesham

மேஷம்

இன்று உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். தொழில்  வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். பழைய பாக்கிகள் வசூலாகும்

 

reshabam

ரிஷபம்

இன்று குடும்பத்தில் கணவன் மனைவியிடையே வீண் மன ஸ்தாபங்கள் ஏற்படலாம். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். கையிருப்பு குறையும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்பட்டால் நற்பலன் கிட்டும்.

3

மிதுனம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றி ஏற்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். உற்றார் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளின் விருப்பம் நிறைவேறும். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.

kadagam

கடகம்

இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்

 

5

சிம்மம்

.இன்று நீங்கள் ஆரோக்கிய ரீதியாக சற்று பலவீனமாக காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் சாதகப் பலன் கிட்டும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். பயணங்களில் கவனம் தேவை.

 

kannirasi

கன்னி

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் குழப்பமும் நிம்மதியற்ற நிலையும் உண்டாகும். முக்கிய பேச்சுவார்த்தைகளை தள்ளி வைப்பது நல்லது. வெளி இடங்களில் அமைதியாக இருந்தால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வெளியூர் பயணங்களில் அதிக கவனம் தேவை.

 

thulam

துலாம்

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகதுச்சிகள் நடைபெறும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். திருமண முயற்சிகளை தொடங்க அனுகூலமான நாளாகும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

viruchagam

விருச்சிகம்

இன்று பிள்ளைகளால் சுப செலவுகள் ஏற்படும். திருமண சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். நினைத்தது நிறைவேறும்.

danush

தனுசு

இன்று உங்களுக்கு பயணங்களால் அலைச்சல் இருக்கும். சிலருக்கு வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். பெரியவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். கடன்கள் ஓரளவு குறையும்.

magaram

மகரம்

இன்று பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை இருக்கும். குடும்பத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். 

kumbam

கும்பம்

இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகி எதிர்பார்த்த லாபம் கிட்டும்.

meenam

மீனம்

இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களால் வீட்டின் அமைதி குறையும். உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் இதுவரை இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும்.
 

Next Story

இன்றைய ராசிபலன் - 24.04.2024

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Today rasi palan - 16.04.2024

இன்றைய  பஞ்சாங்கம்

24-04-2024, சித்திரை 11, புதன்கிழமை, நாள் முழுவதும் தேய்பிறை பிரதமை திதி. சுவாதி நட்சத்திரம் இரவு 12.41 வரை பின்பு விசாகம். நாள் முழுவதும் சித்தயோகம். லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். 

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00 

இன்றைய ராசி பலன் - 24.04.2024

mesham

மேஷம்

இன்று ஆனந்தமான செய்திகள் வீடு தேடி வரும். குடும்பத்தினர் அன்புடன் நடந்து கொள்வார்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். தொழில் ரீதியாக அரசு வழி உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பொன் பொருள் சேரும்.

reshabam

ரிஷபம்

இன்று உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து சாதகமான பலனை அடைவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும்.

3

மிதுனம் 

இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க நேரிடும். நெருங்கியவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கும்.


kadagam

கடகம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். செய்யும் செயல்களில் ஆர்வம் குறைந்து காணப்படும். உறவினர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். நண்பர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிட்டும். கடன் பிரச்சினைகள் குறையும்.
 

5

சிம்மம்

இன்று பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் சந்தோஷம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். வியாபார ரீதியான பயணங்களால் அதிக லாபம் அடைவீர்கள்.
 

kannirasi

கன்னி

இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உடனிருப்பவர்களுடன் வீண் வாக்குவாதங்கள் தோன்றலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் முன்னேற்றத்தை காண முடியும். எதிலும் பொறுமை தேவை.
 

thulam

துலாம்

இன்று வியாபாரத்தில் அமோகமான லாபம் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளி பயணங்களில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.

viruchagam

விருச்சிகம்

இன்று தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். பணவரவு சுமாராக இருந்தாலும் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோக ரீதியான பயணங்களில் அலைச்சலுக்கேற்ப நற்பலன்கள் உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும்.
 

danush

தனுசு

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வேலையில் உங்கள் திறமைக்கேற்ற புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.


magaram

மகரம்

இன்று உறவினர்கள் மூலம் உள்ளம் மகிழும் செய்திகள் வந்து சேரும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பூர்வீக சொத்துகளால் நல்ல அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழில் முன்னேற்றத்திற்கான உழைப்புகள் அனைத்திற்கும் நற்பலன் கிடைக்கும். சேமிப்பு உயரும்.
 

kumbam

கும்பம்

இன்று குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை நிலவும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் சற்று கவனம் தேவை. உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும். வியாபார வளர்ச்சிக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். கொடுத்த கடன் வசூலாகும்.

meenam

மீனம்

இன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படலாம். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

Next Story

இன்றைய ராசி பலன் -23.04.2024

Published on 22/04/2024 | Edited on 23/04/2024

 

Today rasi palan - 16.04.2024

இன்றைய  பஞ்சாங்கம்

23-04-2024, சித்திரை 10, செவ்வாய்க்கிழமை, பௌர்ணமி திதி பின்இரவு 05.19 வரை பின்பு தேய்பிறை பிரதமை. சித்திரை நட்சத்திரம் இரவு 10.32 வரை பின்பு சுவாதி. நாள் முழுவதும் சித்தயோகம். சித்ரா பௌர்நமி விரதம். சித்ரகுப்த பூஜை. வாஸ்து நாள் காலை 8.50-9.26. 

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

இன்றைய ராசி பலன் - 23.04.2024

mesham

மேஷம்

இன்று நீங்கள் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். எந்த ஒரு கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவு உண்டாகும். குடும்பத்துடன் தூர பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு குறையும். வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும்.
 

reshabam

ரிஷபம்

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் அனகூலமான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபத்தை அடைவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.

3

மிதுனம் 

இன்று உங்களுக்கு சுபவிரயங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வகையில் வம்பு வழக்குகள் உண்டாகும். எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உங்களின் பிரச்சினைகளுக்கு உறவினர்கள் பக்க பலமாக இருந்து உதவுவார்கள். உத்தியோகத்தில் நல்ல மாற்றம் ஏற்படும்.

kadagam

கடகம்

இன்று வியாபார ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களால் சில இடையூறுகள் உண்டாகலாம். எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். தெய்வ வழிபாடு மன அமைதியை கொடுக்கும்.
 

5

சிம்மம்

இன்று உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டங்கள் குறையும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழிலில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.
 

kannirasi

கன்னி

இன்று உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும் சூழ்நிலை ஏற்படலாம். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். எதிலும் கவனத்துடனும், சிக்கனத்துடனும் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை குறையும். கடன் பிரச்சினை ஓரளவு தீரும்.
 

thulam

துலாம்

இன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை தரும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பழைய கடன்கள் வசூலாகும்.

viruchagam

விருச்சிகம்

இன்று நீங்கள் நினைத்த காரியத்தை செய்து முடிக்க சில இடையூறுகள் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப்பலன் கிடைக்கும். திருமண சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். தொழில் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும்.
 

danush

தனுசு

இன்று உறவினர்கள் வழியில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். ஆரோக்கிய பிரச்சினைகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். அலுவலகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலங்கள் உண்டாகும். சேமிப்பு உயரும்.


magaram

மகரம்

இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன் வசூலாகும். உறவினர்களால் அனுகூல-ம் கிட்டும்.
 

kumbam

கும்பம்

இன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக உடல் அசதி மந்த நிலை ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை குறையும். உங்கள் ராசிக்கு காலை 09.18 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் சற்று நிதானம் தேவை. உங்களுக்கு மதியத்திற்கு பிறகு அனுகூலமான செய்தி கிடைக்கும். மன நிம்மதி ஏற்படும்.

meenam

மீனம்

இன்று உங்களுக்கு மனஉளைச்சல் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு காலை 09.18 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படும். மற்றவர்களிடம் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. சுபகாரிய முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது உத்தமம்.