கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

Advertisment

cell: 0091 7200163001. 9383763001,

இன்றைய பஞ்சாங்கம்

04-07-2020, ஆனி 20, சனிக்கிழமை, வளர்பிறைசதுர்த்தசிதிதிபகல் 11.34 வரைபின்புபௌர்ணமி. மூலம்நட்சத்திரம்இரவு 11.22 வரைபின்புபூராடம். நாள்முழுவதும்சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. கோகிலாவிரதம். பௌர்ணமி. குருபூர்ணிமா. இராகுகாலம் -காலை 09.00-10.30, எமகண்டம்மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுபஹோரைகள் -காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

Advertisment

தினசரிராசிபலன் - 04.07.2020

mesham

மேஷம்

இன்று உங்களுக்கு மன அமைதி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். உற்றார் உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பழைய கடன்கள் வசூலாகும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

reshabam

ரிஷபம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்ய நினைக்கும் காரியங்களில் காலதாமதம் உண்டாகும். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி புதிய முயற்சிகளை செய்யாமல் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை. வெளியூர் பயணங்களை தவிர்ப்பது உத்தமம்.

3

மிதுனம்

இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவார்கள். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும். திருமண சுபகாரியங்கள் கைகூடும்.

kadagam

கடகம்

இன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். திருமண முயற்சிகளில் இருந்த மந்த நிலை நீங்கி அனுகூலப்பலன் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். திடீர் பணவரவு உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தர்ம காரியங்களில் ஈடுபாடு காட்டுவீர்கள்.

5

சிம்மம்

இன்று குடும்பத்தில் பெரியவர்களுடன் மனஸ்தாபங்கள் உண்டாகும். தொழில் ரீதியாக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் ஆதரவால் நன்மை கிடைக்கும். வேலையில் எதிரிகளால் ஏற்படும் பிரச்சினைகள் குறையும். பணவரவு சுமாராக இருக்கும்.

kannirasi

கன்னி

இன்று குடும்பத்தில் அமைதி குறையும். உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பணிபுரிபவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கலாம். பெரியோர்களின் ஆறுதல் வார்த்தைகள் நம்பிக்கையை கொடுக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் தொழிலில் லாபம் கிட்டும்.

thulam

துலாம்

இன்று உங்களுக்கு பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நீண்ட நாள் எதிர்பார்த்த காரியம் நிறைவேறும். புதிய நபரின் அறிமுகத்தால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

viruchagam

விருச்சிகம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் கூடும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வாகனங்களில் செல்லும் பொழுது சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. உடன்பிறந்தவர்கள் உறுதுனையாக இருப்பார்கள்.

danush

தனுசு

இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்கள் ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிட்டும்.

magaram

மகரம்

இன்று உங்களுக்கு உடல்நிலையில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். குடும்பத்தில் ஆடம்பர செலவுகளால் பணநெருக்கடி உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் சற்று மந்தநிலை ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவால் புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சாதகபலன் கிட்டும். தெய்வ வழிபாடு நல்லது.

kumbam

கும்பம்

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் உடன்பணிபுரிபவர்கள் மூலம் அனுகூலப்பலன் கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் பெருகும்.

meenam

மீனம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை நல்ல படியாக இருக்கும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பழைய கடன்கள் வசூலாகும்.