ADVERTISEMENT

இன்றைய ராசிபலன் - 03.02.2020

11:58 PM Feb 02, 2020 | kalaimohan

கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

ADVERTISEMENT

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001

ADVERTISEMENT

இன்றைய பஞ்சாங்கம்


03-02-2020, தை 20, திங்கட்கிழமை, நவமி இரவு 09.19 வரை பின்பு வளர்பிறை தசமி. கிருத்திகை இரவு 12.52 வரை பின்பு ரோகிணி. மரணயோகம் இரவு 12.52 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1/2. தை கிருத்திகை. முருக வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.
இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

மேஷம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் அமோகமாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

ரிஷபம்

இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வருமானம் பெருகும்.

மிதுனம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகலாம். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியை அளிக்கும். தொழில் ரீதியாக வெளியூர் நபர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.

கடகம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திடீர் என்று நல்ல செய்தி வரும். எடுக்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அரசு உத்தியோகத்தில் கௌரவ பதவிகள் கிட்டும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும். பண பிரச்சினை நீங்கும்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் இனிய நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளின் படிப்பு சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். ஆன்மீக ஈடுபாடு உண்டாகும். தொழிலில் லாபம் பெருகும்.

கன்னி

இன்று உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் வீண் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும். பெரியவர்களின் ஆலோசனைகள் புது நம்பிக்கையை தரும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிட்டும்.

துலாம்

இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. மற்றவர்களிடம் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்ப்பது உத்தமம்

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் தாராள தன வரவும், லட்சுமி கடாட்சமும் உண்டாகும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

தனுசு

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்துடன் ஆன்மீக பயணம் செல்ல நேரிடும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும். சேமிப்பு உயரும்.

மகரம்

இன்று உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்க கூடும். தொழில் ரீதியான முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களால் தடைகள் ஏற்படலாம். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.

கும்பம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறைந்து பிரச்சினை ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சலுக்கேற்ப லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. கடன் பிரச்சினைகள் சற்று குறையும்.

மீனம்

இன்று உங்களுக்கு உடல்நிலை மிக சிறப்பாக அமையும். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். புதிய நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும். உத்தியோகத்தில் சிலருக்கு மேலதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT