திருப்பரங்குன்றம் குடமுழுக்கு விழா; அறநிலையத்துறை முக்கிய அறிவிப்பு!

thiruparankundram-temple-function

முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில் நாளை (14.07.2025) காலை குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த குடமுழுக்கு விழாவானது நாளை காலை 05.25 மணி முதல் 06.10க்குள் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த குடமுழுக்கு நிகழ்ச்சிக்காக 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். 

அதே சமயம் குடமுழுக்கு விழாவிற்கு வரும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காகக் கையில் டேக் பொருத்த ஏற்பாடு மதுரை மாநகர காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தகவல் தெரிவித்துள்ளார். குடமுழுக்கு நிகழ்வையொட்டி திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுத் தங்க நிறத்தில் ஜொலித்து வருகிறது.  இதற்கிடையே குடமுழுக்கில் பங்கேற்ப்பதற்காக மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் இருந்து சுவாமி சுந்தரேஸ்வரர் மற்றும் மீனாட்சி அம்மன் தங்க பல்லக்கில் எழுந்தருளி திருப்பரங்குன்றம் புறப்பட்டனர்.

இந்நிலையில் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் குடமுழுக்கு விழாவையொட்டி நாளை காலை 07.30 மணி முதல் பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதிக்கப்படுவர் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. எனவே நாளை மற்றும் நாளை மறுநாள் (15.06.2025) பக்தர்களின் சிறப்புக் கட்டண வழிபாடு முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் அனைவருக்கும் பொது தரிசனத்தில் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

hrce madurai temple Thiruparankundram
இதையும் படியுங்கள்
Subscribe