Skip to main content

“திருச்செந்தூர் முருகனுக்கு அப்படி ஒரு சக்தி...” - நாஞ்சில் சம்பத் பேச்சு

Published on 09/11/2022 | Edited on 09/11/2022

 

"Truchendur Murugan has such a power...."- Nanjil Sampad speech!

 

'ஓம் சரவண பவ' யூ-டியூப் சேனலுக்கு பேச்சாளரும், இலக்கியவாதியுமான நாஞ்சில் சம்பத் நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதிலிருந்து, "முருகனுக்கு பல்வேறு பெயர்கள் இருக்கிறது. செந்தில்குமரர், திருமால் மருகன் என்று பெயர் இருக்கிறது. சேவற்கொடியோன் என்றும் பெயர் இருக்கிறது. அவரைக் கொண்டாடுபவர்கள் பல பெயரில் அழைக்கிறார்கள். பழனியப்பன் என்று பெயர் இருக்கிறது. பல பெயர்களைத் தாங்கி நிற்கக் கூடிய முருகப் பெருமானுக்கு இன்னொரு பெயர் இருக்கிறது. அது என்ன தெரியுமா? அந்த பெயர் சிரங்கப்ப ராயர். அவன் அதிபதி. செல்வத்துக்கு அதிபதி. நிலத்துக்கு அதிபதி. இந்த உடலுக்கும், உயிருக்கும் அவன்தான் அதிபதி. ஆனால், சிரங்குக்கும் அவன்தான் அதிபதி. 

 

இதை ஏன் சொல்லுகிறேன் தெரியுமா? செந்தில் குமரன்; திருமால் மருகன்; சிந்தைக் கொடி கொண்ட தேசிகன் மீது தீராதப் பற்று வைத்திருந்தவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. அவருடைய அந்திமகாலத்தில் அவருக்கு உடம்பு முழுவதும் வெப்பு; உடம்பு முழுவதும் கொப்புளம். அவரைப் பார்ப்பதற்கு ஒரு பேராசிரியர் வந்தார். “ஐயா கவிமணி, உங்கள் உடம்புக்கு என்னாச்சு” என்று கேட்டார். இதை சிரங்குன்னு சொல்லிருக்கலாம். அவர் சிரங்குன்னு சொல்லல. எல்லா கொப்புளமும் ஒவ்வொரு கலரில் இருக்கிறது. அவர் அந்த சிரங்கை பார்த்துட்டு சொன்னார்: முத்து, பவளம், முழு வைரம், மாணிக்கம், பத்தி ஒளி வீசும் பதக்கம். சித்தன், சிரங்கப்ப ராயன் எனக்கு தரம் கண்டு தந்த தனம் என்று பாடினார். எனக்கு உயிர் தந்தது முருகன் தான். எனக்கு உடைமை தந்தது முருகன் தான். எனக்குப் புலமை தந்தது முருகன் தான். என்னைக் கவி எழுதச் சொன்னது முருகன் தான். 

 

எனக்குக் கல்வெட்டு ஆராய்ச்சிக்குக் கதவு திறந்து வைத்தது முருகன் தான். எனது வாழ்விலும், தாழ்விலும் என்னோடு இருப்பவனும் முருகன் தான். அப்போது அந்த சிரங்குக்கு அவன்தானே அதிபதி. அதனால், நான் அவனை சிரங்கப்பராயன் என்று சொல்லுகிறேன். செந்தில் குமரன் என்கிற திருச்செந்தூர் முருகனுக்கு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை சிரங்கப்பராயன் என்று பெயர் சூட்டினார். அந்தப் பேராசிரியர் கேட்டார். இதற்கு நீங்கள் எந்த மருந்தும் வாங்கவில்லையா? என்று. 

 

உண்ட மருந்தாலும், உடல் முழுவதும் பூசிக்கொண்ட மருந்தாலும் மண்டு சிரங்கப்பராஜா என கொஞ்சம் கூட குறையவில்லை. அதனால் நான் முருகனிடம் கேட்கிற ஒரே வரம் என்ன தெரியுமா? எனக்கு விடிய மட்டும் சொறியனும், அதுக்கு எனது இரண்டு கைகள் போதாது என்று கூறினார். இப்படி முருகனுக்கு எத்தனையோ  திருநாமங்கள் இருந்தாலும், முருகனுக்கு சிரங்கப்பராஜன் என்று ஒரு திருநாமமும் இருக்கிறது. அது பல பேருக்குத் தெரியாது. உலகத்தில் இருக்கின்ற நேயர்களுக்கு நான் நினைவுபடுத்துகிறேன். முருகனுக்கு இன்னும் ஒரு பெயர் இருக்கிறது. 

 

ஆகவே, செந்தில் ஆண்டவர், சிந்தைக் கொடி கொண்ட தேசிகர், அதைத் தாண்டி அவன் சிரங்கப்பராஜர், பகலிக்கூத்தருக்கு வயிற்று வலி வந்தபோது, பகலிக்கூத்தரின் வயிற்று வலியைத் தீர்த்ததனால் திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ் என்று சொல்லி பகலிக்கூத்தர் திருச்செந்தூர் முருகன் மீது ஒன்று பாடினார். இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய இடங்களில் காலாலே நடந்தான் ஆதிசங்கரர். அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஆதிசங்கரர் என்றால் யார்? சிவபெருமானின் அம்சம் என்று பேசப்பட்டவர். அவருக்கே உடல் சரியில்லை. 

 

ஆதிசங்கரர் திருச்செந்தூர் வந்தார். முருகனைக் கண்களிக்கக் கண்டார். தன்னுடைய நோயையும், தன்னுடைய ஆற்றாமையும் அழுது புலம்பினார். பன்னீரிலே பிரசாதம் வாங்கினார். நெற்றி நிறையப் பூசிவிட்டு, கோவிலில் இருந்து வெளியே வந்தார். அவரது உடலில் இருந்த நோயும், வலியும் உடனடியாகப் பறந்து போனது. திருச்செந்தூர் முருகனுக்கு அப்படி ஒரு சக்தி இருப்பதை நான் சொல்லவில்லை. ஆதி சங்கரர் பகவத் பாதர் என்கிற காலடி சங்கரரே அறுதியிட்டுச் சொல்லுகிறார். ஆகவே, முருகனை முதலாகக் கொண்டவர்கள், முருகனை மூலதனமாகக் கொண்டவர்கள். எதுவாக இருந்தாலும் முருகனுக்கு அர்ப்பணிக்கிறவர்கள். இன்றைக்கும் இருக்கிறார்கள். நேற்றைக்கும் இருந்தார்கள் என்பதற்கு உதாரணம் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை". இவ்வாறு நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

 

 

Next Story

'இவர்கள் எங்களை ஆதரிக்கிறார்கள் என்பதே போதுமானது'' - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு 

Published on 24/08/2023 | Edited on 24/08/2023

 

"It is enough that the Dharmapura Adheena Kurumaka Sannithans support us" - Principal M.K.Stal's speech

 

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தருமபுரம் ஆதீன கலைக் கல்லூரியில் 75 வது பவளவிழாவின் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். விழாவில் பேசிய தமிழக முதல்வர், 'ஆலயங்களில் அன்னைத் தமிழ்; மூவாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கோயில் நகைகள் மீட்பு; அறநிலையத்துறை சார்பில் 10 கலை கல்லூரிகள்; கோவில் திருப்பணிகளை ஒருங்கிணைக்க குழு; இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள பழமையான கோவில்களை பழமை மாறாமல் சீர் செய்து குடமுழுக்கு நடத்த உத்தரவு; திருக்கோவில் பணிகள் மேற்கொள்ள மண்டல மாநில அளவிலான வல்லுநர் குழு; தற்போது வரை 3,986 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்வதற்காக வல்லுநர் குழுவால் அனுமதி; ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான வரலாற்று சிறப்புமிக்க நூற்றுப் பன்னிரண்டு திருக்கோவில்களை பழமை மாறாமல் சீர் செய்ய 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு என இந்த நிதியாண்டில் மட்டும் 5,078 திருக்கோவில்களின் திருப்பணிகள் மூலம் இந்து சமய அறநிலையத்துறையைக் காத்து வரும் ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி. இதனை மக்கள் அறிவார்கள். அறிவது மட்டுமல்ல வாழ்த்திக்கொண்டும் இருக்கிறார்கள்.

 

நீதிபதிகளே அறநிலையத்துறைக்கு நாம் ஆற்றும் பணிகளைப் பார்த்து வியந்து பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் மொழி, தமிழர்கள், தமிழ்நாடு என்ற மாநிலம் காப்பாற்றப்பட வேண்டும். வீர முத்துவேல் போன்ற அறிவியலாளர்களை எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும். அனைவரும் தமிழ்த்தாயின் பிள்ளைகள் என்ற நோக்கத்தோடு செயல்படுவதற்கான உணர்வை தர வேண்டும். மாணவர்களின் பசியாற்றும் காலை உணவுத் திட்டம் தமிழ்நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது. அப்படி விரிவாக்கம் செய்யப்படக்கூடிய திட்டத்தை கலைஞர் படித்த திருக்குவளை பள்ளியில் இருந்து நான் தொடங்கி வைத்திருக்கிறேன். 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்ற வள்ளலாரின் ஏக்கத்தைப் போக்கும் வகையிலான மக்களுக்கான திட்டம் தான் காலை உணவுத் திட்டம். அனைத்து நன்மைகளும் அனைவருக்கும் கிடைக்கக் கூடாது என்ற ஒரு கூட்டம் தான் எங்களுக்கு எதிரான பரப்புரையில் ஈடுபடுகிறது. அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. தர்மபுர ஆதீனம் போன்ற நல்லிணக்கத்தை விரும்பும் சகோதரத்துவத்தை விரும்பும் குருமகா சன்னிதானங்கள் எங்களை ஆதரிக்கிறார்கள் என்பதே எங்களுக்குப் போதுமானது'' என்றார்.

 

 

Next Story

கலைஞர் நூற்றாண்டு பேச்சுப் போட்டி; பரிசுகளை வழங்கிய முதல்வர் 

Published on 23/08/2023 | Edited on 23/08/2023

 

Artist Centennial Speech Contest Chief Minister who presented the prizes

 

திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 

அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சரின் ‘தலை நிமிரும் தமிழகம்’ என்ற தமிழகத்தின் விடியலுக்கான முழக்கத்தைக் கல்லூரி மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாகத் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம், தமிழகத்திலுள்ள அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்துக் கல்லூரிகளின் மாணவ, மாணவியருக்காகத் தமிழிலும், ஆங்கிலத்திலும் பேச்சுப் போட்டிகளை நடத்தியது. கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் பாடத்திட்டங்களுக்கு அப்பால், மாணவர்கள் அறிந்தும், உணர்ந்தும், தெளிய வேண்டிய உன்னத விழுமியங்களை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கவும், தமிழ்ச் சமூகத்தின் தனித்துவமான பண்பாடுகளை, பெருமைகளை, இலக்கியங்களை, கலைகளை, வரலாற்றை மாணவர்கள் அறிந்துகொள்ளும் விதமாகவும், தமிழகத்தின் 38 மாவட்டங்களில் நடத்தப்பட்ட இப்பேச்சுப் போட்டிகளில் 4,000 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

 

ஒவ்வொரு மாவட்டத்திலும், தமிழிலும், ஆங்கிலத்திலும் தனித்தனியாகப் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவ, மாணவியருக்கு தலா ரூ.20,000, ரூ.10,000 மற்றும் ரூ.5,000 ஆகிய பரிசுகளும், மாநில அளவில் தமிழிலும், ஆங்கிலத்திலும் தனித்தனியாகப் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவ, மாணவியருக்கு தலா ரூ.1,00,000, ரூ,50,000 மற்றும் ரூ.25,000 ஆகிய பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன. மாவட்ட அளவில் 228 மாணவ, மாணவியர்களும், மாநில அளவில் 6 மாணவ, மாணவியர்களும் இப்பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகளைப் பெற்றனர்.

 

Artist Centennial Speech Contest Chief Minister who presented the prizes

 

சென்னை கோயம்பேட்டில் உள்ள தூய தாமஸ் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்ற கலைஞரின் நூற்றாண்டு விழா மற்றும் அனைத்துக் கல்லூரி மாணவ மாணவியருக்கான பேச்சுப் போட்டி பரிசளிப்பு விழாவில், மாநில அளவில் வெற்றி பெற்ற 6 மாணவ, மாணவியருக்குப் பரிசுத் தொகைக்கான காசோலைகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் க. பொன்முடி, மா. சுப்பிரமணியன், செஞ்சி மஸ்தான், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி. பிரபாகர ராஜா, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் சா. பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர்  திண்டுக்கல் லியோனி என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.