Srirangam Ranga Nachiyar Swing Festival Completed

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடைபெறும் ரங்க நாச்சியார் ஊஞ்சல் உற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டின் ரங்க நாச்சியார் ஊஞ்சல் உற்சவம் விழா, கடந்த 6ஆம் தேதி துவங்கி நிறைவு நாளான நேற்று (12ஆம் தேதி) முடிவடைந்தது.

Advertisment

அதன்படி, மாலை 5.30 மணிக்கு ரங்க நாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் வந்தடைந்தார். அங்கு ரங்க நாச்சியார் இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரை ஊஞ்சல் உற்சவம் கண்டருளிய பின்னர், இரவு 8.45 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு படிப்பு கண்டருளி, இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இத்துடன் ரங்க நாச்சியார் ஊஞ்சல் உற்சவம் நிறைவு பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் உள்ளிட்ட பணியாளர்கள் செய்திருந்தனர்.

Advertisment