Sabarimala temple Opening walk Devotees darshan

கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் பக்தர்கள் மத்தியில் மிகவும் பிரசத்தி பெற்ற ஆன்மிக தலம் ஆகும். இங்கு நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை இன்று (15.11.2024) மாலை 5 மணியளவில் திறக்கப்பட்டுள்ளது. அப்போது பக்தர்கள் சரண முழக்கங்களை எழுப்பினர். சபரிமலை தந்திரி கண்டிரு மகேஷ் மோகனரு, தந்திரி பிரம்ம தர்சன் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி தலைமையில் கோயில் நடை திறக்கப்பட்டு நெய் தீபம் ஏற்றப்பட்டது. அதாவது கோயில் நடை திறக்கப்பட்டு முக்கிய நிகழ்வாக கற்பூர ஆழியில் தீபம் ஏற்றப்பட்டது.

Advertisment

இதனைத் தொடர்ந்து டிசம்பர் 26ஆம் தேதி பிரதான மண்டல பூஜை நடைபெற உள்ளது. ஜனவரி 15ஆம் தேதி மகர ஜோதி தரிசனமும் நடைபெற உள்ளது. அதன்படி ஜனவரி 19ஆம் தேதி வரை என 62 நாட்களுக்குக் கோயில் நடை திறந்திருக்கும் எனக் கூறப்படுகிறது. இதனையொட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதோடு அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டும், கேரள அரசும் கவனித்து வருகிறது.

Advertisment

அதே சமயம் சபரிமலைக்குத் தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டிற்கான சபரிமலை சிறப்பு பேருந்தின் இயக்கத்தினை இன்று கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், கிளாம்பாக்கத்திலிருந்து, போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்மோகன் தொடங்கி வைத்தார்.