Advertisment

கிண்ணிமங்கலம் ஏகநாதர் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி சிறப்பு யாகம்!

Rahu-Ketu pooja at Kinnimangalam Eknathar temple!

Advertisment

ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு சனிபகவான், இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறையும், ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ராகு – கேது ஆகிய கிரகங்களும் இடம் பெயர்கின்றன. இன்று (செப்டம்பர் 1) அனைத்துக் கோவில்களும், வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி திறப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், கிண்ணிமங்கலம் ஏகநாதர் கோயிலில், சர்ப்ப கிரகங்களான ராகு-கேது பெயர்ச்சியை முன்னிட்டு, சிறப்பு யாகங்களும், பூஜைகளும் நடைபெற்றன.

ஏகநாதர் கோயில் குறித்து தெரிந்துகொள்வோம்!

மதுரை மாவட்டம் - செக்கானூரணி அருகில் உள்ளது கிண்ணிமங்கலம். இங்குள்ள ஏகநாதர் கோவிலில், சித்தர்கள் மூவரது ஜீவசமாதிகள் உள்ளன.

Rahu-Ketu pooja at Kinnimangalam Eknathar temple!

Advertisment

சில ஆயிரம் வருடங்களுக்கு முன், திருபூலா நந்தீஸ்வரபுரத்தில் (இன்றைய சின்னமனூர்) சைவ வேளாளர் குலத்தில் பிறந்தவர் அருளானந்தம். அப்போது, பழனி போகரின் சீடர் புலிப்பாணியின் இரண்டாவது சீடரிடம் பயிற்சி பெற்ற 17 பேர், மானசரோவர் அனுப்பப்பட்டனர். ரிஷிகளின் வழியில் பயிற்சி பெற்ற அச்சீடர்களில், அருளானந்தம் மட்டும் சதுரகிரி யமவனத்தில், மணிப்புறா வாழும் பாறையில் தவம் செய்தார். அதன்பிறகு, நாகமலை நடுப்பகுதியில் காகபுஜண்டர் சித்தர் தவம் செய்ததாகக் கூறப்படும் குகை ஒன்றில் இறுதி தவம் செய்தார். அந்த அருளானந்தமே பின்னாளில் சத்குரு என்றழைக்கப்பட்டு, கிண்ணிமங்கலத்தில் கருவறையில் உள்ள சிவலிங்கத்துக்குக் கீழ் ஜீவசமாதி அடைந்தார். அவருடைய சீடர்களான மாணிக்கவாசக தம்பிரான்கன்னி மூலையிலும், சபாபதி தம்பிரான் வாயு மூலையிலும் ஜீவசமாதி அடைந்துள்ளனர்.

Rahu-Ketu pooja at Kinnimangalam Eknathar temple!

ஏகநாதர் கோவில் மண்டபத்தின் கீழ் நவபாஷான கிண்ணி உள்ளது. கோவிலைச் சுற்றி 16 சீடர்களும் ஆனந்தவல்லி அம்பாளின் 16 கோணங்களில் அமைந்துள்ளனர். இவர்களில் மூன்றாவது சீடர்தான் இக்குருகுல மடத்தை உருவாக்கினார். இவர் திருமணம் செய்து, தன்னுடைய சுற்றத்தாருக்காக ஊரை உருவாக்கி, கிண்ணிமங்கலம் என்றும், இம்மடத்தினை கிண்ணிமடம் எனவும் பெயர் சூட்டி, 117 -ஆவது வயதில் சமாதி அடைந்தார். இவருடைய வாரிசுகளின் வழிவந்த குருவழித் தொண்டராக இருக்கிறார் மு.அருளானந்தம். இங்கே மடத்தின் பாடத்திட்டங்களாக, 16 கலைகள் சம்பந்தப்பட்ட அனைத்து வித்தைகளும் இலவசமாக, வெளிப்படையாக, இரண்டு தசமி திதிகளிலும் கற்றுத் தரப்படுகின்றன.

Ad

ராகு – கேது பெயர்ச்சி நாளான இன்று, ஏகநாதர் கோவிலில் கோ பூஜை நடத்தியதும், பசுவுக்கு அகத்திக்கீரை மற்றும் வாழைப்பழங்களை பக்தர்கள் ஊட்டினார்கள். சிறப்பு யாகத்தில் கலந்துகொள்ள வந்திருந்த வெளியூர் பக்தர்களுக்கும், கிண்ணிமங்கலம் ஊர் மக்களுக்கும், கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

madurai temple
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe