Skip to main content

சுக்கிரனுக்கு அன்புக் கரமா? அசுர குணமா?

சச்சிதானந்த பெருமாள்
 

ஒவ்வொருவரின் சுகவாழ்வின் பின்னணியில் நிற்பவர் சுக்கிரனே. ஜாதகக் கட்டங்களில் எங்கு நின்றால் அன்புக்கரம் நீட்டுவார்? கெட்டு நின்றால் எவ்வாறு அசுர குணங்களை அன்பளிப்பார் என விளக்கவே இந்த சுக்கிர ரகசியங்கள் கட்டுரை. நவகிர கங்களும் தாம் இருக்கவேண்டிய வீட்டில், நல்ல ஆதிபத்திய அமைப்பில் இருந்தால் இடுக்கண் இல்லா மகிழ் வாழ்வுதான் மாந்தருக்கு, சிலருக்கு சுகம் அருளும் மாதா சுக்கிரன் ஏன் பின்தங்குகிறார்? பலருக்கு ஏன் சனிகூட சஞ்சலம்களை கிறார் என்பதை இயன்றவரை விளக்குகிறேன்.
 

agniswara god

சுக வாழ்வும் சுபிட்சமும் சுக்கி ரனின்றிக் கிடைப்பதில்லை. ஒருவரின் லக்னம் ரிஷபம், துலாம், மீனமாகி, லக்னத்திலேயே சுக்கிரனும் இருந்து விட்டால், வசீகரிக்கும் நிலாமுகம், எடுப்பான உடல் தோற்றம், கல்வி, கலைகளில் பாண்டித்யம் தந்து, வாலிபத்தில் நங்கையர் நேசத்திற்கேற்ற நாயகனாக்குவதும் சுக்கிரனே. இந்த மூன்று லக்னங்களில் அமைந்த சுக்கிரனுக்கு, குரு பார்வையும் இருந்துவிட்டால் படித்த படிப்பிற்கேற்ற உத்தியோகம், நயமான சம்பாத்தியம், சொத்துசுக மேன்மை அதிக முயற்சி இல்லாமலே அமைந்துவிடும். இடையிடையே சிரிப்பொலிலி சிந்துகின்ற சிங்காரிகளின் நேசமும் போனஸாகக் கிட்டும். எனவே தான் ரிஷப, துலா, மீன லக்ன சுக்கிரனை வசீகரத்தோடு அன்புக்கரம் நீட்டுபவர் என வெற்றி ஜோதிடர் கணிக்கின்றனர்.
 

agniswara god temple

அசுரக் கரம் எப்போது என அவசரத்தோடு கேட்கும் ஜோதிட நெஞ்சங்களுக்கு இதோ பதில். மேஷ லக்னத்தில் ஒருவரின் சுக்கிரன் நின்றால், தனம் இருந்தபோதும் நல்ல குணம் அமைவ தில்லை. பருவ வயதினிலே சுந்தரிகள் மோகம் மிகும். பாரம்பரியக் குலப்பெருமைகள் சிதைக்கப்படும். ஒருபடி மேலாக செவ்வாயும் மேஷ லக்னம் அமைந்த சுக்கிரனைப் பார்த்து விட்டால், அழகும் கவர்ச்சியும் இவர்களை ஆட்டிப் படைக்கும். சூது வழி, மாது வழி- கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த பூர்வீக சொத்து, பணம், குடும்ப கௌரவங்களை நடப்பில் வரும் சுக்கிர புக்தி, செவ்வாய் புக்திகளில் இழந்து, அரியாசனம் இழந்த ஆண்டியாக்குவது சுக்கிரனின் அசுரகுணமே.

agniswara

மிதுனம், கன்னி லக்னமாகி அதில் சுக்கிரனும் தங்கிவிட்டால் மிதமான (Moderate) கல்வி, வசதி, வண்டி, வியாபாரத் திறமைகளைப் பெற்றிருந்தாலும், வாஞ்சையுடன் வஞ்சியருக்கே சொத் தனைத்தும் செலவு செய்திடுவார். கன்னி, மிதுனம் அமைந்த சுக்கிரனுடன் புதனும் இணைந்துபட்டால், கமலவிழி கனிமொழிகளின் கால்பாதம் பற்றித் திரிவர். குடும்பம் அல்லல் படும். தனகாரகன் குரு, மிதுன, கன்னி சுக்கிரனை முழுப்பார்வை பார்த்து விட்டால் இவரது எண்ணங்களை எழுத்தில் வடித்து, கவிதையாக்கி காசு பணம் சேர்ப்பார். அந்த மாதிரி மஞ்சள் எழுத்தாளர்களை உருவாக்கும் அசுர குணம் சுக்கிர அமைப்பே.

சனி மனைகளான மகர, கும்பத்திலும், செவ்வாய் வீடுகளான மேஷ, விருச்சிகத்திலும் லக்னத்திலேயே சுக்கிரனும் இணைந்து நின்றால் ஜாதகர் போக நாயகர். எண்ணம், செயல் அனைத்தும் இழிநிலை (Bad Thougts) கொண்டவராக இருப்பர். விவேகம் இழந்த வாழ்வாகும். கனி இருக்க நோய்பற்றிய காய் கவர இவர் மனம் விரும்பும். வழிமாறும் வாலிலிபமே இவர்களுக்கு.

சிம்ம லக்னமாகி அதில் சுக்கிரனும் அமைய, அசுர குருவானவர் அன்புக் கரமே நீட்டுவார். ஜாதகர் வளர வளர எண்ணம், செயல் அனைத் துமே பொருள் ஈட்டுவதிலே திளைக்கும். எப்படி சம்பாதிக்கலாம் என்ற எண்ணமே எப்போதும் இவர் நெஞ்சிலே உறையும். சின்னத் திரை, இன்னிசை, நடன நாடகங்கள்மூலம் நல்ல சம்பாத்தியம் அடைவார்கள்- நவ நாகரிக மங்கையரின் துணையுடன். எட்டை எட்டிப் பார்த்த கிரகவழி துன்பம் நேரும் என்ற நியதிப்படி, 8-ல் சுக்கிரன் நின்று அது சனி வீடுகளான மரகம், கும்பம் ஆனால், சனி தசை, சுக்கிர தசைக் காலங்களில் விரை வான வேகம் (Over speed) காரணமாக, பயணங்களில் வாகன விபத்துகளால் துன்பம் பல அனுபவிக்க நேரும். 8-ல் சுக்கிரனுடன் செவ்வாயும் சேர அல்லது பார்க்க, பிற மாதர் நேச மஞ்சத்தால், இல்லறத்தில் புயல் வீசும்.

கூண்டுக்கிளி இருக்க, காட்டுப் பூனைக்கு வலைவிரிப்பார். இந்த நிலையில் 8-ஆம் இடத்திற்கு, 8-ஆம் அதிபதிக்கு தேவ குரு பார்வை கிடைத்தால் துன்பம் அணுகாது; கெடுபலன் நிகழாது. குரு காண குணமும் குடும்பமும் கீழ்நோக்காது. சனியின் கேந்திரங்களில் சுக்கிரன் அமைந்தவருக்கு நோயுள்ள துணையே அமையும். மணவாழ்வு மங்கிய நிலவாக, மருத்துவமனையே துணையாக வாழ நேரிடும் சிலருக்கு. செவ்வாய்க்கு 4, 7, 10-ல் சுக்கிரன் நின்றால் துணைவர்மீது வதந்திகள்வழி இன்னல் புகும். சுக்கிரனோடு சந்திரன் இணைந்து 3, 6, 11-ல் அமைந்தால் தீய பெண் சினேகத்தால் சுய விலாசமே மறைய நேரிடுகிறது காளையருக்கு.

முடிவுரையாக, ஒருவர் ஜாதக சுக்கிரன் ஆட்சி, உச்சம், திரிகோணங்களில் நின்று, சுக்கிர தசை நடந்ததால்; புதன் புக்தி, ராகு புக்திக் காலங்களில் சுபப்பலன் விருத்தி செய்வார். குடும்பங்களில் இளைய பருவத்தினருக்கு சுக்கிரனும் சந்திரனும் இணைந்து கும்பம், மகர ராசிகளில் நின்றால் மிக கவனமாகக் கண்காணிக்க வேண்டும். தவறினால் கரைதாண்டிய ஓடமாவார்கள். எழில் மங்கையரின் சுக்கிரன் ரிஷபம், துலாம், மீனத்தில் நின்றால் கனிவான பேச்சிருக்கும். அழுக்குவழி நடக்காதவர்களே. அடுத்துக் கெடுக்கவும் மாட்டார்கள். அநியாயம், அராஜகம் செய்யாத அன்புக் கரங்களேதான். ரிஷப, துலாமில் சுக்கிரனுடன் வேறு பாவி சேராத ஆண்களின் மணவாழ்வு சிறப்பாகவே நடைபெறும். பெண் ராசி வீடுகளான ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனத்தில் சுபிட்ச காரகன் சுக்கிரன் அமர்ந்தவர்கள் நாடு போற்ற, உதாரண தம்பதியராக வாழ்கிறார்கள். வாழ்க வளமுடன்.


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்