The huge Anjaneyar statue that came to Kollidakkarai ..!

திருச்சி ஸ்ரீரங்கம் கொள்ளிடக் கரையில் முப்பத்து மூன்று அடி உயர ஆஞ்சநேயர் சிலை அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் இதற்கு முன் சென்னை நங்கநல்லூரில் முப்பத்து மூன்று அடியில் ஆஞ்சநேயர் சிலை உள்ளதால் அதைவிட சற்று கூடுதலான உயரத்தில் அமைக்க திட்டமிடப்பட்டது.

Advertisment

இதனிடையே 105 டன் எடையுள்ள 40 அடி உயரத்தில் ஒரே கல் கிடைத்தவுடன் 37 அடி உயர சிலை அமைப்பது என முடிவெடுத்து அந்தக் கல்லில் ஆஞ்சநேயர் சிலை கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டியில் வடிவமைக்கப்பட்ட இந்த 37 அடி உயர ஆஞ்சநேயர் சிலையை ராட்சத லாரி மூலம் சாலை வழியாக ஸ்ரீரங்கம் மேலூரில்உள்ள கொள்ளிடக்கரைக்கு நேற்று (13.09.2021) கொண்டுவரப்பட்டது.

Advertisment

ஆஞ்சநேயர் சிலையைப் பிரதிஷ்டை செய்வதற்கான பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆஞ்சநேயர் சிலை அமைக்கப்பட்டு, அதனுடன் நரசிம்மர், சக்கரத்தாழ்வார், ராமர், சீதை, லட்சுமணன் உள்ளிட்ட சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.