Advertisment

விழிக்கே அருளுண்டு! -பி. ராஜலக்ஷ்மி

இவ்வுலகிலுள்ள தாய்கள் தன் குழந்தைகளிடம் அன்பு காட்டுகிறார்கள்.

தன் குழந்தையின் நலன்வேண்டி பல தியாகங்கள் செய்கிறார்கள். உலக மாதாவான பராசக்தியோ உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளையும் தன் கடாட்சத்தினாலேயே ரட்சிக்கிறாள். தேவியின் கடாட்சத்தினால்தான் மும்மூர்த்திகளும் சக்தி பெற்றார்கள் என்று புராணங்கள் சொல்கின்றன. வாய் பேசமுடியாத மூககவி, கல்வி அறிவே இல்லாத காளிதாசர், காளமேகப் புலவர் போன்றோர் அம்பிகையின் கடாட்சத்தினாலேயே கவி பாடும் திறமை பெற்றார்கள்.

Advertisment

god

பரம பாகவதரான குசேலர் மிக வறுமையான நிலையில் இருக்கும்போது, மனைவி சுசீலையின் வேண்டுகோளைஎற்று பால்ய நண்பரான கிருஷ்ணனை தரிசிக்க துவாரகை சென்றார். கண்ணன் குசேலரைப் பார்த்ததும் ஆனந்தம் கொண்டு கட்டியணைத்து தன்னருகே அமர்த்தி உபசரித்தார்.

மகாலட்சுமியான ருக்மினி தேவியும் உடனிருந்து குசேலருக்கு அர்க்யம், பாத்யம் கொடுத்து விசிறிவிட்டாள். குசேலர் பிரமித்துப்போய் பேசமுடியாமல் பரவசமாகி லட்சுமிதேவியோடுகூடிய கிருஷ்ணனைக் கண்டு மெய்ம் மறந்த நிலையை அடைந்தார். கிருஷ்ணனும் குசேலருடைய வறுமையை நீக்கி ஐஸ்வர்யங்களை அளிக்கத் திருவுளம் கொண்டார். இருந்தாலும் அந்த சக்தி தேவிக்குதான் உண்டென்பதால், மகாலட்சுமியின் கடாட்சம் குசேலருக்குக் கிடைக்கவேண்டு மென்று நினைத்தார் பரந்தாமன். அடுத்த வினாடி தேவி கண்ணனைப் பார்த்து, ""சுவாமி, இந்த பிராமணர் எந்த திக்கிலிருந்து வருகிறார்?'' என்று வினவினாள். கண்ணபிரானும் இதுவே தருணமென்று, ""இதோ பார் தேவி... இந்த திக்கிலிருந்துதான்...'' என்றவுடன், கருணாசாகரியான மகாலட்சுமி அந்த திசையில் தன் அருட்பார்வையை வீசுகிறாள். அந்த நிமிடமே அஷ்ட ஐஸ்வர்யங்களும் ஓடிப்போய் குசேலருடைய இல்லத்தை நிரப்பிவிட்டன.

Advertisment

temple

இராமாயணத்தில், இராவணவதம் முடிந்தவுடன் ஸ்ரீராமபிரான் சீதாதேவியோடு அயோத்திக்குச் செல்ல ஆயத்தமாகிறார். அப்போது ஸ்ரீராமனின் முகம் வாடுகிறது. விபீஷண பட்டாபிஷேகம் எல்லாமே முடிந்த பிறகும் ராமனின் முகம் வாடி மனம் தடுமாறுகிறது. ஏனெனில் இராவண வதத்திற்குப் பின் இலங்கை நகரமானது ராஜ்யஸ்ரீயை இழந்து சோபையே இல்லாமல் காட்சியளிக்கிறது. அப்படிப்பட்ட இலங்கையை தன் பக்தனான விபீஷணனுக்கு அளிப்பதா என்றெண்ணி ராமன் வேதனைப்பட்டார். அடுத்த நிமிடம் தன் அருகிலிருந்த சீதா தேவியைப் பார்த்து, ""தேவீ, உனது நயனங்களால் கடாட்சித்து இலங்கைக்கு அருள்புரிய வேண்டும்'' என்கிறார். திருமகளான சீதாதேவி கருணையோடு இலங்கை நகரைக் கடாட்சிக்கிறாள். அந்த விநாடியே இலங்கை நகரம் பொலிவு பெற்று ராஜ்யஸ்ரீயுடன் பிராகசிக்கிறது.

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட ஆலகால விஷத்தால் அத்தனைப்பேர்களும் அவதிப்பட்டார்கள். பரமேஸ்வரன் எல்லாரையும் ரட்சிக்கும் பொருட்டு அந்த விஷத்தை அருந்தி நீலகண்டன் என்னும் திருநாமம் பெற்றார் என்பது யாவரும் அறிந்ததே. சங்கரனார் விஷத்தைக் கையில் ஏந்தியபொழுது அம்பிகையான பார்வதிதேவி தன் கடாட்சத்தினாலேயே நஞ்சை அமிர்தமாக்கிவிட்டாள். அமிர்தேஸ்வரி என்ற திருநாமம் கொண்டு அருள்பாலித்து வருகிறாள்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="1282094959"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

வடமொழியில் "அக்ஷ' என்றால் கண்களைக் குறிக்கும். இதனாலேயே பராசக்தியான அன்னை காமாக்ஷி, மீனாக்ஷி, விசாலாக்ஷி என்றெல்லாம் நாமம் கொண்டு, பார்வை ஒன்றினாலேயே உலகத்தை ரட்சித்து வருகிறாள். காமாக்ஷி அன்னைக்கு கண்களை வைத்தே அந்த நாமம் ஏற்பட்டது. தேவி உபாசகரான ஸ்ரீமுத்துசுவாமி தீட்சிதர் தன் கிருதியில் "சாரதா ரமா நயனே' என்று, தேவியின் நயனங்களில் ரமையும், வாணியும் உள்ளார்கள் என்று பாடுகிறார்.

யுகம்யுகமாக துர்வாசர், தௌம்யர், தத்தாத்ரேயர், சுகர் போன்ற ஞானிகள் அம்பிகையின் அருள்பெற்று ஆத்மானுபவத்தைப் பெற்றார்கள். ஆதிசங்கரரும் அம்பிகையைப் பற்றி எண்ணற்ற துதிப்பாடல்களைப் பாடியருளினார். அவற்றுள் ஸ்தோத்ர சிகரமாகத் திகழும் "சௌந்தர்ய லஹரி' துதியில் தேவியின் கடாட்ச வைபவத்தைப் பற்றி பல பாடல்களில் வர்ணிக்கிறார்.

அதற்குப்பிறகு தோன்றிய ஸ்ரீமூககவி அம்பிகையை 500 பாடல்களில் தேன் சொட்ட வர்ணிக்கிறார். சோழ நாட்டில் தோன்றிய அபிராமி பட்டர், 69-ஆம் பாடலில் "தனம் தரும் கல்வி தரும்' என்று அவளின் கடைக்கண் அருளைப் போற்றுகிறார். அந்தாதியின் 79-ஆவது பாடலாகிய "விழிக்கே அருளுண்டு' என்ற பாடலைப் பாடி முடித்தவுடனே அபிராமியம்மை அவருக்குக் காட்சியளித்து அருளினாள்.

ஸ்ரீரங்கம் தலத்தில் பெருமாளுக்கு ஒரு நாள் தாயாரைப்போலவே மிகவும் நேர்த்தியாக அலங்கரிப்பார்கள். இதை அனுபவித்த ஆழ்வார், "பெருமாளே, நீ என்னதான் தாயார் வேடம் பூண்டாலும் தாயாருடைய நயனங்களிலுள்ள கருணையைக் காணமுடியவில்லையே' என்று பாடுகிறார்.

அம்பிகையின் கடாட்சம் கிடைத்தாலே நாம் உன்னதமாக இருப்போம். அம்பிகை தன் இயற்கையான கருணையைப் பொழிந்து அவளை உபாசிப்பவர்களது ஆத்மா பரமாத்மாவிலேயே கரைந்திருக்குமாறு அருள்கிறார். அன்னைக்கு உகந்த நவராத்திரி நன்னாளில் அன்னையை உபாசித்து அவளுடைய அருளைப் பெறுவோம்.

aanmeegam horoscope SPIRITUAL worship
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe