Advertisment

தோஷ ஜாதகத்தில் யோகம் இருக்குமா?

ஏ.ஆர்.ஆர். சுதர்சனன்.

ஜோதிடத்தில் தோஷமுள்ள ஜாதகம், யோகமுள்ள ஜாதகம் என இரு பிரிவுகள் உள்ளன. தோஷ ஜாதகத்தில் நாகதோஷம், காலசர்ப்ப தோஷம், களத்திர தோஷம், புத்திர தோஷம், செவ்வாய் தோஷம், மாங்கல்ய தோஷம், பிரம்மஹஸ்தி தோஷம், பிதுர்தோஷம் என பலவகை உள்ளன. மாங்கல்ய தோஷம் என்பது கணவனை இழத்தல் என்பது மட்டும் பொருளல்ல. இது பலவகையில் வரும். உதாரணமாக அன்பில்லாத கணவன், மனைவிக்கு துரோகம் செய்யும் கணவன், நோயுள்ள கணவன், வேலை, தொழில் செய்யாமல் சோம்பேறியாய்த் திரியும் கணவன், சம்பாதிக்கும் பணத்தை குடும்பத்திற்குக் கொடுக் காமல் தவறான வழிகளில் செலவழிப்பவன், உத்தமியான மனைவியை சந்தேகிக்கும் கணவன், குடும்பத்தை கவனிக்காமல் எப்போதும் நண்பர்களுடன் சுற்றித்திரிபவன், ஆண்மை யற்ற கணவன், பிடிவாதம், முன்கோபம் உள்ளவன், ஏழ்மையில் துன்பப்படும் தோஷமுள்ள கணவன் அமைவதெல்லாம் மாங்கல்ய தோஷத்தில் வரும்.

Advertisment

yoga

களத்திர தோஷத்திலும் பலவகை உள்ளன. உதாரணமாக நல்ல குணமுள்ள மனைவி அல்லது கணவன் அமை யாமல் இருப்பது; கணவன்- மனைவி இருவரும் மதிக்காமல் நடப்பது; கணவன் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை மனைவி ஊதாரித்தனமாக செலவு செய்வது; பொறுப்பற்ற கணவன்- மனைவி அமைவது; கணவன்- மனைவிக்கிடையே ஒற்றுமையில்லாமல் இருப்பது; சந்தேகம் கொள்வது; கணவன், மனைவி இருவரும் தவறான வழியில் மறைமுகமான நடவடிக் கையில் ஈடுபடுவது, குடிகாரக் கணவன் அமைவது போன்றவையெல்லாம் களத்திர தோஷ வகையில் சேரும்.

Advertisment

yoga

குழந்தைகள் தாமதகமாகப் பிறப்பது; குழந்தைகள் இந்த ஜென்மாவில் அமை யாமல் போவது; குழந்தைகள் பிறந்தும் பெற்றோர்களுக்கு உதவாமல் போவது; நல்ல குணமுள்ள- சமுதாயத்தில் பெய ரெடுக்கும் குழந்தைகள் பிறக்காமல் போவது; பெற்றோர்கள் பிள்ளைகளைத் துன்புறுத்துவது; பிள்ளைகள் வாழ்க் கையில் முன்னேற முடியாமல் கஷ்டப் படுவது; பிள்ளைகள் பிறந்து இடையில் இழப்பது; பெற்றோர்களை முதியோர் இல்லத்திற்குத் தள்ளுவது; பிள்ளை களால் பெற்றோர்களுக்கு தலைகுனிவு ஏற்படுவது போன்ற நிகழ்வுகள் எல்லாம் புத்திரதோஷத்தில் வரும்.

yoga

வாழ்க்கையில் அதிர்ஷ்டப் பலன்கள் கிடைத்து அனுபவிப்பதுதான் யோகம். ஜோதிடத்தில் எண்ணற்ற யோகங்கள் உள்ளன. ஒவ்வொரு மனிதரின் ஜாதகத்தில் யோகங்கள் சிலருக்கு அதிகமாகவும், சிலருக்கு குறைவாகவும் இருக்கும். யோகங்கள் பலவகை உள்ளன. கஜகேசரி யோகம், குருச்சந்திர யோகம், பஞ்சமகா புருஷயோகம், சந்திரமங்கள யோகம், நித்ரயோகம், வெளிநாடு யோகம், புத்திரயோகம், பெற்றோர்களால் யோகம், சகடயோகம், விமலா யோகம், சுனபா யோகம் என எண்ணற்ற யோகங்கள் ஜோதிடத்தில் உள்ளன.

குருச்சந்திர யோகம் என்பது குருவும் சந்திரனும் சேர்வது அல்லது சந்திரனுக்கு திரிகோண ஸ்தானமான 5, 9-ல் குரு இருப்பது. இந்த யோகத்தால் படிப்பிற்கு சம்பந்தமில்லாத துறையில் நுழைந்து, அதன்மூலம் சாதனை செய்து வாழ்க்கையில் பெரிய அளவில் பொருள் சம்பாதித்து முன்னேற்றம் அடைவது. சந்திரனுக்கு கேந்திரத்தில் 1, 4, 7, 10-ஆம் இடத்தில் குரு இருந்தால் கஜகேசரி யோகம். இந்த யோகத்தால் சமுதாயத்தில் நான்குபேர் மத்தியில் சிங்கம்போல் வாழ்வார்கள். இது காசு பணம் கொடுக்கும் யோகமல்ல. தோஷமுள்ள ஜாதகமானாலும், தோஷமற்ற ஜாதகமானாலும் யோகங்கள் ஜாதகத்தில் இருக்கும். தோஷமில்லாத சுத்த ஜாதகத்தில் யோகங்கள் இருந்தால் நூறு சதவிகிதப் பலன்கள் கொடுக்கும். தோஷமுள்ள ஜாதகத்தில் யோகங்கள் இருக்கும். ஆனால் தோஷங்கள் அதிகமாக இருந்தால் யோகங்கள் முழுமையான பலன் களைக் கொடுக்காது. யோகங்களின் அளவைக் குறைத்துவிடும். இதனால் யோகங்கள் இருந்தும் பயனில்லாமல் போய்விடும்.

யோகங்களின் பலன்கள் அதற்குரிய தசாபுக்தி நடை முறையில் இருந்தால் மட்டுமே முழுமையாகக் கிடைக்கும். லக்னத்தின் அடிப்படையில் யோகங்கள் அமைந்தால் நூறு சதவிகிதப் பலன்கள் கொடுக்கும். ராசியின் அடிப்படையில் வரும் யோகங்கள் ஐம்பது சதவிகிதப் பலன்கள்தான் கொடுக்கும். லக்னாதிபதி வலுவாக இருப்பது மிக முக்கியம். அதேபோல யோகங்களைக் கொடுக்கும் கிரகங்கள் நூறு சதவிகிதம் வலுவாக இருந்தால் மட்டுமே முழுமையான பலன்கள் கிடைக்கும். இல்லையென்றால் அதற்கேற்றாற்போல் யோகப்பலன்கள் அமையும். யோகப்பலன்கள் நடைமுறையில் கிடைக் கிறதோ இல்லையோ- அதையே நம்பிக் கொண்டிருக்காமல் உழைத்து வாழவேண்டிய யோகம் இருந்தால்போதும். அதை வைத்து வாழ்க்கையில் முன்னேறிவிடலாம்.

யோகப் பலன்கள் சில நேரங்களில் நேர்வழியில் வரும்; சில நேரங்களில் குறுக்குவழியில் வரும். உதாரணமாக, குருவும் கேதுவும் சேர்ந்தாலோ பார்த்தாலோ கோடீஸ்வர யோகம் என்று ஜோதிடத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இந்த யோகம் நேர்வழியில் அமைந்தால் வாழ்க் கையில் பயன்படும். குறுக்குவழியில் கிடைக்கும் கோடீஸ்வர யோகம் பின்னால் சிக்கலில் மாட்டிவிட்டு நடுத்தெருவுக்குக் கொண்டுவந்துவிடும். தசாபுக்தி முடிந்துவிட்டால் யோகங்கள் எல்லாம் முடிந்துவிடும். மீண்டும் யோகத்தைத் தராது. ராகு வழியில் வரும் யோகம் சில நேரங்களில் உச்சத்திற்குக் கொண்டு செல்லும். அதே ராகு கீழே அதளபாதாளத்திற்குத் தள்ளிவிடும். எனவே தோஷமுள்ள ஜாத கத்தில் யோகங்கள் இருக்கும்; ஆனால் தோஷம் கடுமையாக இருந்தால் யோகத்தின் அளவைக் குறைத்துவிடும்.

worship SPIRITUAL horoscope aanmeegam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe