மனித வாழ்க்கையில் சில தருணங்களில் தடங் கல்களும், போதாத காலங்களும் வரும் என்று தீர்க்கதரி சனமாகச் சொல்லிவைத்த பெரியோர்கள், அவ்வாறான பிரச்சினைகளும் தடைகளும் விலகுவதற்கான வழிமுறைகளையும் விளக்கியிருக்கிறார்கள்.விவாக முகூர்த்தம், பிரம்ம முகூர்த்தம், அபிஜித் முகூர்த்தம், லக்னநிர்ணய முகூர்த்தம் என்று பிரித்து வழிபாடுகளைச் செய்யச் சொன்னார்கள். இவற்றில் பலரும் அறிந்திராத மைத்ர முகூர்த்தமும் உண்டு. இது கடன்களை அடைக்க உகந்த நேரமாக உள்ளது.

Advertisment

god image

கடன் தொல்லையால் மீளமுடியாமல் தவிக்கும் அன்பர்கள், இந்த மைத்ர முகூர்த்த நேரத்தைக் கணித்து, அந்தத் தருணத்தில் கடனில் சிறு பகுதியையாவது அடைக்க முயற்சிப்பது சிறப்பு.கடன் கொடுத்தவர், இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக வாங்க மறுக்கிறார் எனில், சிறு சிறு தொகையாக நமது வங்கிக் கணக்கில் சேர்த்து சேமித்து, பிறகு மொத்தமாக அடைக்கலாம். அப்படி, மாதந்தோறும் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் நேரமானது மைத்ர முகூர்த்தமாக இருக்கும்பட்சத்தில் வெகு சீக்கிரத்தில் பணம் சேர்ந்து, மொத்த கடனும் அடைபடும். அப்படி வங்கி கணக்கில் சேமிக்க முடியாதவர்கள் உங்களால் முடிந்த அளவு பணத்தை நீங்கள் பணம் கொடுக்க வேண்டியவரை நினைத்து சிவப்புத்துணி அல்லது சிவப்பு உண்டியலில் சேர்த்து இதே மைத்தர முகூர்த்தத்தில் சேர்த்தால் கடன் வெகு விரைவில் அடைபடும்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="1282094959"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

மைத்ர முகூர்த்தம் ஏப்ரல் 2019 வரை

3-1-2019 வியாழன் அதிகாலை 5.12 மணிமுதல் காலை 7.12 மணிவரை;

14-1-2019 திங்கள் மதியம் 12.30 மணிமுதல் 2.30 மணிவரை;

29-1-2019 செவ்வாய் நள்ளிரவு 1.35 மணிமுதல் 3.35 மணிவரை;

2-2-2019 சனி காலை மற்றும் இரவு 7.19 மணிமுதல் 9.19 மணிவரை; மதியம் மற்றும் நள்ளிரவு 1.19 மணிமுதல் 3.19 மணிவரை;

Advertisment

11-2-2019 திங்கள் காலை 10.35 மணிமுதல் மதியம் 12.35 மணிவரை;

26-2-2019 செவ்வாய் இரவு 11.38 மணிமுதல் நள்ளிரவு 1.38 மணிவரை;

10-3-2019 ஞாயிறு காலை 8.49 மணிமுதல் 10.49 மணிவரை;

25-3-2019 திங்கள் இரவு 10.13 மணிமுதல் 12.13 மணிவரை;

7-4-2019 ஞாயிறு காலை 6.43 மணிமுதல் 8.43 மணிவரை.

-பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி