Chidambaram Temple festival

சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலில் ஆண்டிற்கு 6 முறை மகா அபிஷேகம் நடப்பது வழக்கம். அதில் மார்கழி மாதம் நடைபெறும் ஆருத்ரா தரிசனமும், ஆனிமாதம் நடக்கும் ஆணி திருமஞ்சனமும் சிறப்பு வாய்ந்தது. இந்த இரண்டு விழாக்களின் போதும் தமிழகத்தின் பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜ மூர்த்தியை வழிபடுகிறார்கள்.

Advertisment

இந்நிலையில், இன்று ஆனித் திருமஞ்சன விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று முதல் தினசரி காலை மாலையில் பஞ்சமூர்த்தி வீதி உலா நடைபெறும், ஜூலை 1ஆம் தேதி வெள்ளி ரிஷப வாகன உற்சவம் நடக்கிறது. உற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் ஜூலை 5-ஆம் தேதி நடக்கிறது. ஜூலை 6-ஆம் தேதி காலை 3 மணி முதல் 6 மணிக்குள் ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி ஆனந்த நடராஜ மூர்த்திக்கும் மகா அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து மாலை 3 மணியிலிருந்து 4 மணிக்குள் ஆனித் திருமஞ்சனம் தரிசனக் காட்சி நடைபெறும்.

Advertisment