/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/aani_1.jpg)
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித்திருமஞ்சனத்தேரோட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் புகழ்பெற்ற ஆனித் திருமஞ்சனத்திருவிழா சில தினங்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. நடராஜர், சிவகாம சுந்தரி, விநாயகர், முருகர், சண்டிகேசுவரர் ஆகியோர் தனித்தனித்தேர்களில் பவனி வருகின்றனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதற்கு முன்னதாக கோவிலின் கனகசபையில் பொதுமக்கள் நான்கு நாட்கள் வழிபடத் தடை விதித்துள்ளதாகக் கோவில் தீட்சிதர்கள் கனகசபை வாயிலில் அதற்கான பதாகையை வைத்திருந்தனர்.இது தமிழக அரசின் உத்தரவுக்கு எதிரானது என இந்து சமய அறநிலையத்துறையின் தில்லை அம்மன் கோவில் செயல் அலுவலர் சரண்யா தலைமையில் வட்டாட்சியர் செல்வகுமார், காவல்துறையினர் பதாகையை அகற்ற வந்தபோது சரியான காவல்துறையினர் பாதுகாப்பு இல்லாததால் கோவில் தீட்சிதர்கள் செயல் அலுவலரை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்து தகராற்றில் ஈடுபட்டனர்.
மேலும் சிதம்பரம் அருகே உள்ள சிவபுரி கிராமத்தைச் சேர்ந்த சிவ பக்தர் கார்வண்ணன்கோவில் 21ம் படி அருகே சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தபோது, கோவில் தீட்சிதர்களான கனக சபாபதி மற்றும் வத்தன் ஆகிய இருவரும் கார்வண்ணனைத் தரக்குறைவாகப் பேசி கீழே தள்ளிவிட்டு மிரட்டல் விடுத்த செயலும் நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)