Advertisment

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன  திருவிழாவிற்கு கொடியேற்றம் நடைபெற்றது

Chidambaram Nataraja temple flag hoisting for Ani Thirumanjana festival

Advertisment

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆண்டுக்கு இருமுறை ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சனம் மற்றும் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தேர் மற்றும் தரிசன விழா நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான ஆனி திருமஞ்சன தேர் மற்றும் தரிசன விழாவிற்காக கோவிலில் இன்று கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி பஞ்சமூர்த்தி வீதி உலா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கோவிலில் தினம் தோறும் பல்வேறு விதமான சிறப்பு பூஜைகள் மற்றும் சாமி வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெறும்.

வரும் 25 ஆம் தேதி ஆனிதிருமஞ்சன தேர் திருவிழாவும், 26 ஆம் தேதி தரிசன விழாவும் நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் சிவ பக்தர்கள் பொதுமக்கள் லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில்பலத்த பாதுகாப்பு பணி செய்யப்பட்டுள்ளனர்.

Chidambaram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe