Skip to main content

"ஆண்டாளின் மீது கொண்ட காதலால் கண்ணனே..." - நாஞ்சில் சம்பத் பேட்டி

Published on 04/11/2022 | Edited on 04/11/2022

 

 

"Because of the love for Andalin Kannan...."- Nanjil Sampath interview!

 

'ஓம் சரவண பவ' யூ-டியூப் சேனலுக்கு பேச்சாளரும், இலக்கியவாதியுமான நாஞ்சில் சம்பத் நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "மார்கழித் திங்களில்தான் ஆண்டாள் நாச்சியார், அதிகாலையில் துயிலெழுந்து உறங்கிக் கிடந்த தன் தோழிகளைத் துயிலெழுப்பி, கண்ணை சேவிப்பதற்கு அழைக்கின்ற காட்சியை தமிழ் இலக்கியத்தில் ஆண்டாள் பதிவு செய்கிற முறையும்; விதமும் ஆண்டாளுடைய தனித்துவத்தையும், மகத்துவத்தையும் பறைசாற்றியது. ஆண்டாளின் மீது கொண்ட காதலால் கண்ணனே ஒருநாள் நாச்சியார் திருக்குளத்தில் இருந்தான் என்பது தான் இந்த நாட்டின் வரலாறு. 

 

அதிகாலைத் துயிலெழச் சொல்லுகிறாள். உறக்கத்தைக் கலைக்க சொல்லுகிறாள். அதையும் தாண்டி ஒரு நம்பிக்கையை நெஞ்சில் நட்டு வைக்கின்றாள் ஆண்டாள். ஒரு தமிழ் பாட்டுக்கு, பஞ்சபூதங்களுக்கு இல்லாத ஆற்றல் இருக்கும் என்பதை ஆண்டாள் தன்னுடைய வீச்சு மிகுந்தப் பாட்டின் மூலம் பதிவு செய்திருக்கிறார். “மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்” என்று ஆண்டாள் திருப்பாவையைத் தொடங்குகிற பொழுதே, குற்றலாக் குதூகலம் நம்மிடத்தில் குடிகொண்டு வருகிறது. 

 

அந்தக் காலத்தில் ஆயர்பாடிகளிலெல்லாம் சீர் மலிந்து கிடந்தது. செல்வம் குவிந்து கிடந்தது. ஒவ்வொருவருடைய வீட்டிலும் வசந்தம் கோலம் போட்டு நின்றது. இதைப் பார்த்து பரவசப்பட்ட ஆண்டாள் நாச்சியார் சொல்லுகிறார், “சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள் கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்” என்று சொல்லி கண்ணனை அவள் கொண்டாடுகின்றாள். தமிழ்நாட்டின் பண்பாட்டு வரலாற்றிலும்; இலக்கிய வரலாற்றிலும்; அதிகாலையில் துயிலெழுவதும் ,வாசலில் கோலம் போடுவதும், துயில் கலைந்து நீராடுவதும், நீராடி முடிந்ததற்கு பிறகு கண்ணனை சேவிப்பதும், அந்த வழக்கத்தை மார்கழித் திங்களில் நடைமுறைப்படுத்துவதும் ஒரு நடைமுறையாக இன்றைக்கும் நாடு பின்பற்றித் தீர வேண்டிய அளவிற்கு அதை நடைமுறைப்படுத்தியதிலே ஆண்டாள் வெற்றி பெற்றாள். 

 

காலைப் பத்திரிகையைப் பார்த்தால், அதிகாலையிலே தலைநகர் சென்னையில் பஜனைப் பாடிக் கொண்டு ஒரு கூட்டம் போகிறது. ஆகவே, பாட்டும், இசையும் பைந்தமிழ் பண்பாட்டின் இரண்டு கண்கள். அதை இரண்டையும் பின்பற்றி ஆண்டாள் பாடியிருக்கிற பாட்டு பன்னிரண்டு ஆழ்வார்கள் பாடிய பாட்டிலும் உச்சத்தைத் தொட்டது. கண்ணனே நாச்சியார் திருக்கோலத்தில் உட்கார்ந்து, அவனை சேவிப்பதற்கு அவரே வழிகாட்டினார் என்றால், ஆண்டாள் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்பது நமக்கு புரியும். அந்த ஆண்டாள் தான் சொல்லுகிறாள், இன்னுமா உறங்குகிறீர்கள், இன்னுமா உங்களுக்கு உறக்கம் வருகிறது. 

 

உங்களுக்கு பிறை தருவதற்கு அவன் தயாராக இருக்கிறான். உங்களுக்கு கருணைக் காட்டுவதற்கு சித்தமாக இருக்கிறான். உங்களுக்கு அவனுடைய அருள் கடாட்சம் தயார் நிலையில் இருக்கிறது. இதைக் கண்டுகொள்ளாமலும், கவனிக்காமலும் தன்னை மறந்து தூங்கிக் கொண்டிருப்பவர்களே எழுந்திருங்கள். நாராயணனே நமக்கே பிறை தருவான் என்று சொல்லி ஆண்டாள் துயிலெழுப்புகின்றாள். இந்தத் திருப்பாவை என்று சொல்லக்கூடிய இந்த நோன்பும், இந்த தவமும் கல்யாணத்திற்கு காத்திருக்கிற கன்னிப் பெண்களின் கல்யாணம் கைகூடுவதற்கும், அவர்களுடைய வாழ்வில் ஒரு புதிய திருப்பமும், விருப்பமும் நிறைவேறுவதற்கும் இந்த நோன்பு பலனளிக்கின்ற நம்பிக்கை இந்த மண்ணில் இருந்து வருகிறது. 

 

அந்த வகையிலே தான் அதை தமிழ் பண்பாட்டோடு பொருத்தி தமிழில் இருந்து அந்நியப்பட்டு போகாமல், அதை நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு பெண்ணாக பிறந்த பெருமாட்டி. நீ எதை நினைக்கிறாயோ, அதை உயர்வாக நினைக்க வேண்டும். செருப்பை தைத்தாவது பிழைத்துக் கொள்ளலாம். மாடு மேய்த்தாவது வாழ்ந்து விடலாம் என்று கருதுவது குறிக்கோள் அல்ல. அது லட்சியமும் அல்ல. எதை நினைக்கிறாயோ, உயர்ந்த பொறுப்பு. பொறுப்பேற்றால், இந்த நாட்டின் முதல்வராகப் பொறுப்பேற்பேன்." இவ்வாறு நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

 

 

Next Story

குரூப் 2 பணியிடங்களுக்கு இன்று முதல் நேர்முகத்தேர்வு!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
Interview for Group 2 posts from today

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2, 2ஏ பதவிகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. இந்த முதல்நிலைத் தேர்வில் 57,641 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இவர்களுக்கான முதன்மைத் தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி நடந்தது.

இதனையடுத்து, குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து குரூப் 2 பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்ட 327 பட்டதாரிகளின் பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. கடந்த 2 ஆம் தேதி (02-02-24) வெளியிட்டது.

இந்நிலையில் சென்னை பிராட்வேயில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் குரூப்-2 பணிகளுக்கான முதல்கட்ட நேர்முகத் தேர்வு வரும் இன்று (12.02.2024) முதல் வரும் 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்படி டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ள 327 பேருக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. முன்னதாக இது தொடர்பான தகவல்கள் தேர்வர்களுக்கு எஸ்.எம்.எஸ். மற்றும் மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும். தபால் மூலம் அனுப்பப்படாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

ராஜஸ்தானில் துர்க்கை; சுஸ்வாணி மாதாஜி மந்திர் !

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
Suswani Mataji Temple

சுஸ்வாணி மாதாஜி மந்திர் என்னும் ஆலயம் ராஜஸ்தான் மாநிலத்தில், பிக்கானிர் மாவட்டத்திலுள்ள மோர்கானா என்னுமிடத்தில் அமைந்திருக்கிறது. 11-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆலயமிது. இந்துக்கள் மட்டுமின்றி, சமணர்களும் இந்த ஆலயத்தை மிகவும் பக்திப் பெருக்குடன் வழிபடுகிறார்கள். இந்தக் கோவிலில் குடிகொண்டிருக்கும் அன்னை சுஸ்வாணி, துர்க்கையின் அவதாரமாகக் கருதப்படுகிறாள். இந்த ஆலயத்தில் ஒரு மரம் இருக்கிறது. அதற்கு அருகில் சிங்கத்தின்மீது அன்னை வீற்றிருக்கிறாள்.

1573-ஆம் வருடத்தில் ஹேம் ராஜ் என்ற மன்னர் இந்த ஆலயத்தைப் புதுப்பித்திருக்கிறார். அதனால் அவரது வம்சத்தைச் சேர்ந்தவர்கள் இந்த அன்னையை குலதெய்வமாகவே வழிபடுகின்றனர். இதுதவிர, டுகார், சங்க்லா ஆகிய சமணப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் இந்த தேவியைத் தங்களின் குலதெய்வமாக வழிபடுகிறார்கள். ஜெய்ஸால்மரிலிருந்து கொண்டுவரப்பட்ட கற்களால் இந்தக் கோவில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த ஆலயத்தின் வெளிச்சுவரிலுள்ள சிற்பங்களும் அந்தக் கற்களாலேயே அமைக்கப்பட்டிருக்கின்றன.

பிரதான வாயில் மாற்றியமைக்கப் பட்டிருக்கிறது. பூமிக்குக் கீழேயும் அறைகள் இருக்கின்றன. ஆலயத்தின் மேற்கூரை 16 தூண்களின்மீது அமைக்கப்பட்டிருக்கிறது. சில தூண்களில் கல்வெட்டுகள் உள்ளன. இந்த ஆலயத்திற்குள் ஒரு சிவன் கோவிலும் இருக்கிறது. இங்கிருக்கும் சிவலிங்கம் 5,000 வருடங்கள் பழமையானது. சிவனது ஆலயமும் புதுப்பித்துக் கட்டப்பட்டிருக்கிறது.

Suswani Mataji Temple

சேட் சக்திதாஸ் - சுகன் கன்வார் என்னும் தம்பதிக்கு 1219-ஆம் வருடத்தில் மகளாகப் பிறந்தவள் சுஸ்வாணி. பத்து வயதுகொண்ட அவளுக்கும், துகார் வம்சத்தைச் சேர்ந்த ஒருவனுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. திருமணம் நடைபெறுவதற்குமுன்பு அவளைப் பார்த்த நாகூர் நவாஸ் என்ற மன்னன் அவளது அழகில் மயங்கி, தான் அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக சிறுமியின் தந்தையிடம் கூறினான்.

"அவள் துர்க்கையின் அவதாரம். அவளது சரீரத்தை வேறொரு சரீரம் தொடக்கூடாது. இந்து மதத்தைச் சேர்ந்த அவளை முஸ்லிமான நீ அடைய நினைக்கலாமா? அதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்'' என்று கோபத்துடன் கூறினார் சிறுமியின் தந்தை. அதைத் தொடர்ந்து அவரைக் கைது செய்து சிறையிலடைத்தான் மன்னன்.

தன் தந்தைக்கு நேர்ந்த கதியை நினைத்தவாறு கவலையுடன் படுத்திருந்த சுஸ்வாணி, தன் துயரத்தைக் கடவுளிடம் முறையிட்டாள். அப்போது கனவில் ஒரு உருவம் தோன்றியது. "கவலைப்படாதே. நவாப்பைப் பார்த்து நீ சவால் விடு. அவனைப் போட்டிக்கு அழைத்து அதில் வெற்றிபெறும்படி கூறு. போட்டி என்னவென்றால்... நீ ஓரிடத்தில் இருக்கவேண்டும். நவாப் அருகில் வந்து உன்னைத் தொடவேண்டும்'' என்று அந்த உருவம் கூறிவிட்டு மறைந்தது. காலையில் எழுந்தபோது, சிறுமியின் நெற்றியில் ஒரு திலகம் இருந்தது. அந்த செந்தூரத்தைப் பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்டனர். நவாப்புக்கு தகவல் சென்றது.

அந்த சவாலை ஏற்றுக்கொண்ட அவன், சிறுமியின் தந்தையை விடுதலை செய்தான். தன் சிப்பாய்களுடன் நவாப், சிறுமியின் வீட்டிற்குச் சென்றான். அந்தச் சிறுமி நடக்க ஆரம்பித்தாள். அதற்குமுன்பு தன் கைகளால் அவள் சுவற்றில் செந்தூரத்தைப் பதித்தாள். பின்னர் அவள் ஓட ஆரம்பிக்க, அவளை குதிரையில் அமர்ந்து விரட்டினான் மன்னன். ஆனால் அவளோ மிகவும் வேகமாக ஓடினாள். மன்னனால் அவளைப் பிடிக்கவே முடியவில்லை. சிறுமி கடவுளை வேண்ட, அங்கொரு சிங்கம் தோன்றியது. அதன்மீது அமர்ந்த சிறுமி, அங்கிருந்து மோர்கானாவுக்குப் பயணித்தாள். அங்கிருந்த சிவலிங்கத்தை வழிபட்டாள்.

அவளுக்குமுன் தோன்றிய சிவபெருமான் ஒரு இடுக்கியைத் தூக்கிப் போட, பூமி இரண்டாகப் பிளந்தது. சுஸ்வாணி சிங்கத்துடன் பூமிக்குள் செல்ல, பிளந்த பூமி மூடிக்கொண்டது. அவள் அணிந்திருந்த புடவையின் ஒரு சிறியபகுதி பூமிக்குமேலே இருந்தது. அதைப் பிடிக்கமுயன்ற நவாப்பும் அவனுடைய ஆட்களும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு மடிந்தனர்.

மோர்கானாவில் அப்போதிருந்த மரம் இப்போதும் இருக்கிறது. 1232-ஆம் ஆண்டில் சக்திதாஸ், அவரது தம்பி மால்காதாஸ் ஆகியோரின் கனவுகளில் தோன்றிய சுஸ்வாணி, அந்த இடத்தில் ஒரு ஆலயத்தைக் கட்டும்படி கூறினாள். கோசாலையிலிருக்கும் புதையலை எடுத்து அதற்காக செலவிடும்படி சொன்னாள். அதைத் தொடர்ந்து அங்கு ஆலயம் கட்டப்பட்டது. கிணறு தோண்டப்பட்டது. கோசாலை பெரிதாகக் கட்டப்பட்டது.

பாரதத்தில் இந்த சுஸ்வாணி அன்னைக்கு பல இடங்களில் ஆலயங்கள் இருக்கின்றன. ராஜஸ்தானில் நாகூர், ஜோத்பூர், கன்வாலியாஸ், மேற்கு வங்காளத்தில் ராஜாரட், தமிழகத்தில் விழுப்புரம், கர்நாடகாவில் அட்டிபெலே, மகாராஷ்டிரத்தில் அன்டர் சூல் ஆகிய இடங்களில் அன்னை சுஸ்வாணிக்கு கோவில்கள் இருக்கின்றன.

சென்னையிலிருந்து இந்த ஆலயத்திற்குச் செல்ல விரும்புபவர்கள் பிக்கானிருக்குப் பயணிக்க வேண்டும். வாரத்தில் ஒருநாள் வியாழக்கிழமை அனுவ்ராட் எக்ஸ்பிரஸ் ரயில் மதுரையிலிருந்து சென்னை வழியாகச் செல்கிறது. பிக்கானிரிலிருந்து மோர்கானா 43 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.