Advertisment

வணங்கினால் பலன்களை அள்ளித்தரும் ஆவடியில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன்!

Avadi Angala Parameshwari amman temple

Advertisment

ஆவடியில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலின் சிறப்புகள் குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்கின்றனர் கோவில் அர்ச்சகர்களும் பக்தர்களும்...

அம்மனிடம் நீங்கள் மனமுருகி என்ன வேண்டிக்கொண்டாலும் அது நிச்சயம் நிறைவேறும். இங்கு இருக்கும் அம்மன் சுயம்புவாக வளர்ந்த அம்மன். வாழ்க்கையில் சிலர் பணம் வேண்டும் என்றும் சிலர் ஆரோக்கியம் வேண்டும் என்றும் நினைப்பார்கள். அம்மனிடம் சரணாகதி அடைந்தால் வேண்டிய அனைத்தும் நமக்குக் கிடைக்கும். எனக்கு என்ன வேண்டுமோ அதை நிறைவேற்றித்தா என்று அம்மனிடம் வேண்டினால் போதும். அம்மன் நிறைவேற்றி வைப்பாள். நம் கோவிலில் கால பைரவர், சொர்ண பைரவர் என்று இரண்டு பைரவர்கள் இருக்கின்றனர்.

குழந்தை பாக்கியம் வேண்டும், திருமணம் நடக்க வேண்டும் என்று வேண்டி இங்கு வரும் பக்தர்கள் பலர். அவர்களுடைய வேண்டுதல்கள் அனைத்தையும் அம்பாள் நிறைவேற்றித் தருவார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்மனை வழிபட்டு வந்து, அதனால் தங்கள் குடும்பச் சிக்கல்கள் தீர்ந்தன என்று பல பக்தர்கள் கூறுகின்றனர். பங்குனி உத்திரம் இங்கு விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. இங்குள்ள விநாயகர்வினைகள் அனைத்தையும் தீர்க்கும் சக்தி வாய்ந்தவர். சிவன் சன்னதி, பெருமாள் சன்னதியோடு புதிதாக காமாட்சி சன்னதியும் இங்கு உருவாக்கப்பட்டுள்ளது. பார்வதியின் அம்சம் தான் காமாட்சி.

Advertisment

திருப்பதி குடை இங்கு வந்துவிட்டுப் போகும். சொர்க்கவாசல் திறப்பு விசேஷமாக நடக்கும். சனி பகவான் நமக்கு நன்மையையே அதிகம் தருகிறார். இதைப் பலர் உணர்வதில்லை. அம்மனின் பிறந்தநாள் பூஜை மிக விசேஷமாக இங்கு நடக்கும். நவராத்திரி பூஜை ஒன்பது நாட்கள் சிறப்பான முறையில் நடைபெறுகிறது. சிதிலமடைந்த நிலையில் இருந்த இந்தக் கோவிலை கம்பீரமான முறையில் உருவாக்கியவர் நடிகர் டேனியல் பாலாஜி. அவருக்கு மனமார்ந்த நன்றியை அனைவரும் தெரிவிக்கின்றனர்.

aanmeegam temple
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe