astrologer lalgudi gopalakrishnans explanation 8

Advertisment

ஓம் சரணவனபவ யூடியூப் சேனல் வாயிலாக ஆன்மிக கருத்துகளை ஆன்மிகவாதிகள் பலர் பேசி வருகின்றனர், அந்த வகையில், மன திருப்தியை பற்றி ‘கந்தர்வ நாடி’ ஜோதிடர் லால்குடி கோபாலகிருஷ்ணன் தனது கருத்துகளை நம்மோடு பகிர்ந்துள்ளார்.

ஒருவருக்கு எவ்வளவு செல்வம் இருந்தாலும் மன திருப்தி இருக்கிறதா? என்பது மிகவும் முக்கியம். உதாரணத்திற்கு குடி தண்ணீர் இல்லாமல் கடலில் ஒருவர் பயணம் செய்யும்போது அவருக்கு தாகம் எடுக்கிறது. சுற்றி தண்ணீர் இருந்தும் அவர் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுவார். அதுபோல பலர் செல்வம் இருந்தும் மனதில் சந்தோஷம் இல்லாமல் இருக்கின்றனர். இப்படிப்பட்ட வாழ்க்கை சுகப்படாது. ஸ்வீட் விற்பவருக்கு சர்க்கரை நோய் இருந்தால், அவர் வைத்துள்ள இனிப்பு பொருட்களால் எந்த பயனும் இருக்காது. அதனால் செல்வம் மட்டுமே வாழ்க்கை இல்லை மன திருப்தியும் சேர்ந்ததுதான் வாழ்க்கை.

ஜாதகத்தில் மன திருப்தி 11ஆவது பாகத்தில் உள்ளது. செல்வம் கிடைப்பதற்கு தனஸ்தானம் தேவை. அந்த தனஸ்தானத்திற்கு 11ஆவது பாகத்தில்தான் வரவு திருப்தியளிக்கும் வகையில் அமையும். 7ஆம் பாகம் திருமணம். அந்த 7ஆம் பாகத்துடன் 5ஆம் பாகம் சேர்ந்தால் மனதிற்கு பிடித்த காதல் திருமணம் நடக்கும். 11ஆவது பாகம் பூரணம் பெறுவதைக் குறிக்கும். அதனால் ஜாதகத்தில் 11ஆவது இடத்தை பார்த்தால் திருப்தியான வாழ்க்கை அமையுமா? இல்லையா என்று சொல்லிவிட முடியும். தொழிலுக்கான பாகம் 10. இது 8ஆம் பாகத்தில் 11ஆவது இடத்தை பெற்றி திடீர் செல்வந்தர்களாக மாறுவார்கள்.

Advertisment

6ஆம் பாகம் சோதனையையும் வேதனையும் சுட்டிக்காட்டும். ஆனால் 11ஆவது பாகம் திருப்தியளிக்கும் வகையில் இருக்கும். மகிழ்ச்சியாகத் திருப்தியாக இருப்பதுதான் வாழ்க்கையின் அடிப்படை. திருப்தியில்லாத வாழ்க்கை வாழ்வதால் என்ன பயன் இருக்கிறது. எல்லோருடைய வாழ்க்கையும் திருப்தியாக அமைய வேண்டுமென்றால் 11ஆவது பாகம் நன்றாக அமைய வேண்டும். சர ராசிகளுக்கு பாதகஸ்தானம் 11. அதில் சந்திரன் இருந்தால் திருப்தி கிடைக்காது. கடகத்திற்கு 11ஆவது இடத்தில் சந்திரன் வருகிறது. மனோ காரகன் 11ஆவது இடத்திலிருந்து பாதகஸ்தானமாக இருப்பவருக்கு எவ்வளவு செல்வம் கிடைத்தாலும் திருப்தி கிடைக்காது. எனவே மன திருப்திக்கு 11வது பாகத்தை கணிப்பதுதான் முக்கியமான வழி என்றார்.