எடப்பாடி பழனிசாமிக்கு தொடர் மிரட்டல்; மத்திய அரசு போட்ட திடீர் உத்தரவு

a4216

Z-plus security for Edappadi Palaniswami Photograph: (admk)

2026 ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு 10 மாதங்களே உள்ள நிலையில் தற்போதே கூட்டணி குறித்த விவாதங்கள் தமிழக அரசியலில் சூடுபிடித்துள்ளது. அண்மையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதற்கான அறிவிப்பை அதிமுக தலைமை கடந்த 28.06.2025 அன்று வெளியிட்டிருந்தது.

வெளியான அந்த அறிவிப்பில், 'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற உன்னத நோக்கத்துடனான எடப்பாடி பழனிசாமியின் எழுச்சிப் பயணம்' முதல் கட்டமாக 7.7.2025 முதல் 21.7.2025 வரை சட்டமன்றத் தொகுதி வாரியாக நடைபெறும்' என அறிவிக்கப்பட்டிருந்தது.

07.07.2025 அன்று மேட்டுப்பாளையம் கவுண்டம்பாளையம் பகுதியில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தைத் தொடங்க உள்ளார். இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது.

முதற்கட்டமாக 12 பாதுகாப்பு வீரர்கள் சுழற்சி முறையில் அவரை பாதுகாக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. முன்னதாக ஏற்கனவே சேலம் மற்றும் சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு மர்ம நபர்கள் மூலம் பலமுறை வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு வழங்கப்பட்டிருந்த ஒய் பிளஸ் பாதுகாப்புக்கு மேலாக இசட் பிளஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

admk Central Government edapadipalanisamy z+
இதையும் படியுங்கள்
Subscribe