உலகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் பிரபலமான காணொளிப் பகிர்வுத் தளம் யூடியூப் ஆகும். கூகுள் நிறுவனத்திற்குச் சொந்தமான, யூடியூப் உலகின் பல கோடி பயணர்கள் நாள்தோறும் வீடியோக்களை கண்டு ரசித்து வருகின்றனர். இந்நிலையில் யூடியூப்யின் முகப்பு பக்கம் இன்று (18.02.2026) காலையில் திடீரென முடங்கியுள்ளதால் அதன் பயணர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
உலகம் முழுவதும் சுமார் ஒரு மணி நேரம் வரை முடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. முகப்பு பக்கத்தில் ஏதோ தவறு நடந்துவிட்டது என்று ஆங்கிலத்தில் (Something Went Wrong) திரையில் தெரிவதால் பயனர்கள் அவதி அடைந்துள்ளனர். அதே சமயம் யூடியூப் தளத்தில் தேடுதல் பக்கத்தின் உதவியோடு (SEARCH) வீடியோக்களை காணும் வசதி எப்போதும் போல இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து யூடியூப்-யின் எக்ஸ் சமூக வலைத்தளத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தற்போது உங்களால் யூடியூப்-ஐ அணுகுவதில் சிக்கல் இருந்தால், அது உங்களுக்கு மட்டுமே ஏற்படும் பிரச்சனை அல்ல எங்கள் குழுக்கள் இது குறித்து ஆய்வு செய்து வருகின்றன. விரைவில் இது குறித்த அடுத்தகட்ட தகவல்களை என்ற இணையத்தில் பதிவிடுவோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us