வேலூர் மாவட்டம் குடியாத்தம் தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியில் உள்ள மோர்தானா அணை கடந்த சில நாட்களுக்கு முன் நிரம்பி, கவுண்டன்யா மகாநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

Advertisment

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக குடியாத்தம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மோர்தானா அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, மோர்தானா அணையில் இருந்து அதிக அளவில் வெள்ளநீர் வெளியேறி கவுண்டன்ய மகாநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் ருக்மங்காதன் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ கூடாது என எச்சரிக்கை விடுத்த நிலையில்,ஆபத்தை உணராமல் இளைஞர்கள் ஆற்றில் இறங்கி மீன் பிடிக்க வலை விரித்தும், பசு மாடுகளை ஆபத்தான முறையில் ஆற்றில் மேய்ச்சலில் ஈடுபடுத்தியும் வருகின்றனர். 

Advertisment

Untitled-1

மேலும் ஆடு மாடுகளோ இளைஞர்களோ ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு ஆபத்தான சம்பவங்கள் ஏற்படும் முன் பொதுப்பணித்துறையினர் மற்றும் நகராட்சி நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.