Youths chasing Vijay's car - two seriously injured Photograph: (tvk)
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தேர்தல் பிரச்சாரம், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளை திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகள் தொடங்கியுள்ளன. இத்தகைய சூழலில் தான் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சேலம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நிர்வாகிகள் சந்திப்பை நடத்தி முடித்திருந்தார். தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே உள்ள அய்யாசாமிபட்டி பிரிவு சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று (04.03.2026) நடைபெற்றது.
Advertisment
இந்த கூட்டத்தில் கட்சியின் சார்பில் பூத் கமிட்டி பணிகளைத் தீவிரப்படுத்துவது மற்றும் களப்பணியாளர்கள் முன்பு விஜய் நேரடியாக உரையாற்றி அவர்களைத் தேர்தல் பணிக்கு தயார் செய்வதே இந்தச் சந்திப்பின் முக்கிய நோக்கம் எனக் கூறப்பட்டது. இதற்காகத் தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே உள்ள அய்யாசாமிபட்டி பிரிவு சாலை பகுதியில் சுமார் 9 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள திடலில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. வழக்கம் போல திமுக மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியிருந்தார். இந்த நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த சுமார் 4 ஆயிரத்து 900 கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர். கூட்ட நெரிசல் போன்ற அசம்பாவிதங்களைத் தவிர்க்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சாவூர் மாவட்ட காவல்துறையினர் பல்வேறு நிபந்தனைகளுடன் இந்தக் கூட்டத்திற்கு அனுமதி வழங்கி இருந்தனர்.
Advertisment
இந்நிலையில் கூட்டத்திற்குப் பிறகு விஜய்யின் காரை பின்தொடர்ந்து ரசிகர்கள் சென்ற நிலையில் இரண்டு இளைஞர்கள் விபத்தில் சிக்கியுள்ளனர். இருவரும் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் சென்ற வாகனத்தை இருசக்கர வாகனத்தில் செய்ய முயன்ற போது விக்னேஷ் என்ற இளைஞரும், ஹிலால் என்ற இளைஞரும் விபத்தில் சிக்கியுள்ளனர். இதில் விக்னேசுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ஆபத்தான முறையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் ஹிலால் என்ற இளைஞர் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
Follow Us