புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற பசுபதீஸ்வரர் கோயில். இரவில் கோயிலைச் சாத்திவிட்டுச் சென்ற அர்ச்சகர் மறுநாள் காலை கோயிலுக்கு வந்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்தார். பசுபதீஸ்வரர் அம்மன் சன்னதியில் இருந்த இரும்புக் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே இருந்த உண்டியல் மர்ம நபர்களால் திருடப்பட்டிருந்தது. ரூ.9,500 மதிப்பிலான உண்டியலும் அதில் இருந்த சுமார் ரூ.15,000 ரொக்கமும் காணாமல் போயிருந்தன. இதுகுறித்து கோயில் நிர்வாகத்தினர் உடனடியாக திருப்பட்டினம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

Advertisment

4

அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் கோயிலுக்கு வந்து ஆய்வு நடத்தினர். பின்னர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது அதில் மூன்று இளைஞர்கள் கோயிலுக்குள் நுழைந்து இரும்புக் கதவை உடைத்து, உள்ளே இருந்த உண்டியலைத் தூக்கிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. மேலும், உண்டியலைத் திருடிச் செல்லும்போது  மூவரில் ஒருவர் காவல்துறையிடம் கைரேகை ஆதாரம் சிக்கிக்கொள்ளாமல் இருக்க வேண்டும்  என்பதற்காக இரும்புக் கதவில் துணியால் துடைத்த காட்சியும் பதிவாகியிருந்தது.

Advertisment

6

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கோயிலில் நடந்த திருட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ராகேஷ், முரளி, இளையராஜா, முஷரப், முரளிதரன் ஆகிய 5 பேரையும் அடையாளம் கண்டு திருப்பட்டினம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து உண்டியல், ரூ.12,450 ரொக்கம், 3 மோட்டார் சைக்கிள்கள், 4 செல்போன்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். இதையடுத்து 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், பின்னர் சிறையில் அடைத்தனர்.

பசுபதீஸ்வரர் அம்மன் சன்னதியில் உள்ள இரும்புக் கதவை உடைத்து உண்டியலைத் திருடிச் செல்லும் மூன்று இளைஞர்களின் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Advertisment