அரசு பேருந்தில் மது அருந்தியபடி மது பாட்டிலுடன் இளைஞர் ஒருவர் பயணித்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அரசுப் பேருந்தில் கடைசி இருக்கையில் இளைஞர் ஒருவர் ஓபன் செய்யப்பட்ட பீர் பாட்டிலுடன் பயணம் செய்தார். அவர் அவ்வப்போது பீர் குடித்துக்கொண்டு பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பயணிகள் நடத்துனரிடம் தெரிவித்த நிலையில் நடத்துனர் மற்றும் அங்கிருந்தவர்கள் இது குறித்து கேட்டுள்ளனர். அப்பொழுது கேள்வி கேட்டவர்களிடம் அந்த இளைஞர் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் பேருந்தில் சலசலப்பு ஏற்பட்டதால் பேருந்தை நடு வழிலேயே நிறுத்தி போதை ஆசாமியை கீழே இறக்கி விட்டனர். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.