Advertisment

தவெக கொடியுடன் தீ மிதித்த இளைஞர்- விரட்டி அடித்த விழாக்குழுவினர்

911

Youth set fire to Tvk flag, chased away by festival group Photograph: (tvk)

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

Advertisment

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில் சில கட்சி தொண்டர்கள் பொது இடங்களில் விசிலடித்து இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். இதற்கு முன்னரே பல்வேறு இடங்களில் கட்சிக் கொடியைக் காண்பித்து அதை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர். இந்நிலையில் தான் மயிலாடுதுறையில் கோவில் தீமிதி திருவிழாவில் இளைஞர் ஒருவர் கட்சிக் கொடியுடன் தீமிதித்த நிலையில் விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் அந்த இளைஞரை துரத்தித் துரத்தி விரட்டும் காட்சிகள் வைரலாகி வருகிறது.

Advertisment

மயிலாடுதுறை தீய்ப்பாய்ந்தால் அம்மன் கோவில் தீமிதி திருவிழா விமர்சையாக நடைபெற்று வரும் நிலையில் அங்கு வந்த இளைஞர் ஒருவர் தவெக கட்சிக் கொடியுடன் தீ மிதித்தார். அப்போது விழாக்குழுவினர் 'திருவிழாவில் எதற்கு கட்சியைக் கொண்டு வரீங்க?' என அந்த இளைஞரை விரட்டினர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

politics Festival Mayiladuthurai tvk vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe