மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி 31 நாளன்று நடைபெற்ற ஹல்டி கும்கம் நிகழ்ச்சியின் பொது 19 வயது இளைஞர் ஒருவர், அந்த பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு பறக்கும் முத்தம் (Flying Kiss) கொடுத்துள்ளார். இதனைக் கண்ட அந்த சிறுமியின் அண்டை வீட்டார், இது குறித்து சிறுமியின் தாயாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து, சிறுமியின் தாயார் இது போன்ற செயலில் ஈடுபட வேண்டாமென அந்த இளைஞரைக் கண்டித்தார். அப்போது, ஏற்கனவே சிறுமி டியூசனுக்கு சென்று கொண்டிருக்கும் போது அந்த இளைஞர் கையை பிடித்து இழுத்துள்ளார் என்பதும், பிரச்சனை ஏற்படும் என்கிற பயத்தின் காரணமாக அந்த சிறுமி இதனை வெளியில் சொல்லாமல் இருந்ததும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து சிறுமியின் தந்தை அந்த இளைஞரின் தாயாரையே அழைத்து, தனது மகளிடம் இது போன்று தவறான முறையில் நடந்து கொள்ளக் கூடாது என எச்சரித்துள்ளார். ஆனால், அந்த இளைஞரின் குடும்பத்தினர் சிறுமியின் குடும்பத்தினரை அவதூறாகப் பேசி அச்சுறுத்தியுள்ளனர். இதனால், விவகாரம் பெரிய அளவில் பிரச்சனையாக மாறியதால், சம்பவம் குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நடனமாடும் போது பிளையிங் கிஸ் கொடுத்தது இது குற்றத்தின் கீழ் வராது என்று வாதிட்டார். இதற்குப் பாதிக்கப்பட்ட சிறுமி மறுப்பு தெரிவித்தார். மேலும், அவர் குற்றச் செயலில் ஈடுபடும் நோக்கத்தில் தான் இந்த செயலில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார். வழக்கறிஞரின் இந்த வாதத்தையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட நபர் பிளையிங் கிஸ் கொடுக்க சைகை காட்டியது நிரூபணமானதாக உறுதி செய்தனர். இதையடுத்து, பிளையிங் கிஸ் கொடுக்க சைகை காட்டுவது பாலியல் குற்றச் செயல் ஆகும், இது பாதிக்கப்பட்டவருக்கு பாலியல் ரீதியான துன்பத்தை ஏற்படுத்துகிறது என்றும் குறிப்பிட்டனர்.
மேலும், அந்த இளைஞர் தரப்பில் இருந்து தம் மீது புகார் கொடுத்த சிறுமியின் குடும்பத்தினருக்கும், தங்களுக்கும் முன் விரோதம் இருப்பதாகவும், அதன் காரணமாகவே இந்த புகார் அளிக்கப்பட்டதாகவும் வாதங்கள் முன் வைக்கப்பட்டது. இருப்பினும், மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சிறுமியின் குடும்பத்தாருக்கும் அந்த இளைஞருக்கு எந்தவித முன் விரோதமும் இல்லை என்பதும், சிறுமியின் நலன் கருதியே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதும் தெரியவந்தது. இவ்வாறாகக் கடந்த 9 ஆண்டு காலமாக நடந்து வந்த இந்த வழக்கில் அந்த இளைஞர் குற்றவாளி என உறுதி செய்த மும்பை சிறப்பு நீதிமன்றம் அவருக்கு மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 3,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது. தற்போது அந்த இளைஞருக்குத் திருமணமாகி 3 குழந்தைகள் இருப்பது குறிபிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/19/prison-2026-02-19-19-14-22.jpg)